இயற்கையின் கொடை என்றே அதை இது வரை நாம் நம்பிப் பயன்படுத்தி வந்திருக் கிறோம். அதைப் பாதுகாக்க வேண்டுமா னால் அதை இனிமேல் ஒரு பொருளாதாரச் சரக்காகவே கருத வேண்டும்…எதை? தண்ணீரை!மத்திய நீர்வள அமைச்சகம் தயாரித் துள்ள புதிய நீர் கொள்கைக்கான முன்வரை வில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.ஏற்கெனவே தண்ணீர் பன்னாட்டு – உள் நாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அதனை முழுக்க முழுக்க வர்த்தகர்களின் கட்டுப்பாட் டில் விடுவதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டு வர இருக்கிறார்கள். அதற்கான முன்னோட்டமாக பிரதமர் உலகமயமோகன சிங் தலைமையில் நடைபெற உள்ள தேசிய நீர் வள மன்ற (நேஷனல் வாட்டர் ரிசோர் சஸ் கவுன்சில்) கூட்டத்தில் அமைச்சகத்தின் இந்த முன்வரைவு குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.ஏற்கெனவே பொதுமக்களுடன் விவாதம் என்ற ஒரு கண்துடைப்பு ஏற்பாட்டில், அமைச் சகத்தின் வலைத்தளத்தில் இந்த முன் வரைவை வெளியிட்டிருந்தார்கள்.
அதைப் படித்துவிட்டு 600க்கு மேற்பட்டவர்களிட மிருந்து கருத்துகள் வந்திருந்தனவாம். பெரும் பாலானவர்கள் தண்ணீருக்கு விலை நிர்ண யிக்கும் ஆலோசனையையும் நீர் நிர்வாகத் தைத் தனியார்மயமாக்கும் ஆலோசனையை யும் எதிர்த்திருந்தார்களாம். ஆகவே அந்த இரண்டு ஆலோசனைகளையும் அமைச்ச கம் தனது முன்வரைவிலிருந்து இப்போதைக்கு நீக்கியிருக்கிறதாம். நீக்காத மற்ற ஆலோ சனைகள் என்னென்ன?இத்தனை கோடி மக்களின் உரிமை சார்ந்த விசயத்தில் ஒரு 600 பேரின் கருத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு முடிவெடுப்பது என்பது அயோக்கியத்தனம். அவர்களில் பெரும்பாலானவர்கள் விலை, தனியார்மயம் இரண்டையும் எதிர்த்திருக்கிறார்கள் என் பது நல்ல அம்சம்தான். விரிவாக பொது மக்களிடையே கருத்துக்கேட்க தனியார்மய மோகன சிங் அரசு முன்வருமா?அண்மையில் பிரதமர் “தண்ணீருக்கு நியாயமான விலை நிர்ணயிப்பது அவசி யம்” என்று கூறியிருப்பதை இங்கே நினைவு வைத்துக்கொள்வது நல்லது. அமைச்சகமும் கூட விலை நிர்ணயித்தல், தனியார்மய மாக்குதல் ஆகியவை தொடர்பாக “விளக் கங்கள் தேவைப்படுகின்றன” என்ற அடிப் படையில்தான் தனது திருத்தப்பட்ட முன் வரைவில் தற்காலிகமாக இந்த இரண்டு அம் சங்களை மட்டும் இப்போதைக்கு நீக்கியிருக் கிறது. இது இனி இப்படித்தான் என்று மக்களை ஏற்க வைக்கிற நிர்ப்பந்தத் தந்திரங்களில் மத் திய ஆட்சியாளர்கள் விற்பன்னர்கள்.தண்ணீரைப் பொதுத்தொகுப்பு சரக்காக அறிவிக்க வேண்டும் என்று மாண்டேக்சிங் அலுவாலியாவின் திட்டக்குழு ஒரு ஆலோ சனை கூறியிருந்தது. மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அதை அமைச்சகம் இப்போதைக்குத் தள்ளு படி செய்திருக்கிறது.இந்தப் புதிய முன்வரைவு சட்டமாகுமா னால்… ஒருவர் நிலம் வாங்குகிறபோது அந்த நிலத்தில் இருக்கிற நீர் அவருக்கே சொந்தம் -உரிமையாளர் என இதுவரை இருந்துவரு கிற உரிமை தள்ளுபடி செய்யப்படும்.அனைத்து ஊர்களிலும் உள்ள ஏரி, குளம், ஆறு, கால்வாய், கிணறு, நிலத்தடி நீர் உள்ளிட்ட அனைத்து நீர்வளத்தையும் “நீர் பயனாளிகள் சங்கம்” கையாளும். கின்ஸ் லேக்களும் அக்வாஃபினாக்களும் டாடாக் களும் ரிமோட் கண்ட்ரோலில் இயக்குகிற பினாமி ஏற்பாடுகளாகவே அந்த நீர் பயனா ளிகள் சங்கம் நடைமுறையில் மாற்றப்படும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
உலகமய, தனியார்மய, தாராளமய பொரு ளாதாரக் கொள்கைகள் நல்லதுக்குத்தான் என்றும் நமக்கு ஐபிஎல் போதைகளும் ஆன் மிக போதனைகளும் போதும் என்றும் ஒதுங்கி, பொருளாதார மேதைகளின் துரோ கங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட் டால் என்ன நடக்கும்?விரைவில் வாட்டர் பங்க்குகள் அமைக்கப் பட்டு, உலகச்சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு தண்ணீர் விலை நிர்ணயிக்கப் படலாம். விலை உயர்த்தப்படும் நாட்களில் மேற்படி பங்க்குகளில் நோ ஸ்டாக் என அட்டை எழுதி கயிறு கட்டப்படலாம். ஊர்க் குளத்தில் எப்போதாவது நீர் நிரம்பியிருக்கும் நாட்களில் நம் குழந்தைகள் இறங்கி ஆட்டம் போடுகிற அழகு இனி பொருளாதாரக் குற்றமாக்கப்படலாம். அதற்கு இனிமேல் அம் பானிகள் கட்டி விடுகிற நீச்சல்குளங்களுக்குத் தான் குழந்தைகள் போகவேண்டி வரலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.