சென்னை, ஜூன் 8 –
ஆட்டோ டாக்சி ஓட் டுநர் சங்கத்தின் திருவல் லிக்கேணி பகுதிக்குழு சார் பில் வியாழனன்று (ஜூன் 8) கல்வி உதவித்தொகை வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்ஐசி-ஜனஸ்ரீ பீம யோஜனா குழுக்காப்பீடு திட்டத்தின் கீழ் பெறப் பட்ட 61ஆயிரத்து 200 ரூபாயை 102 ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் பி. சுந்தரம் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் என்.ரவிச்சந்திரன், சி.வெள் ளக்கண்ணு, பகுதி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான பிரேஸ்லேட் : லிட்டில் நாதெள்ளா அறிமுகம்
சென்னை, ஜூன் 8 –
இந்தியாவில் முதல் முறையாக குழந்தைகளுக் கான நகைக்காகது வங் கப்பட்டுள்ள லிட்டில் நாதெள்ளா அவர்களுக்கா கவே மடிக்கக்கூடிய பிரேஸ் லெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.இந்த பிரேஸ்லெட்டு கள் தனித் தன்மை வாய்ந்த அழகு கொண்டது. மிகவும் கவனத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடு கொண்டதா கும். மிகவும் சவுகர்யமான வித்தியாசமான மற்றும் மிகச் சிறந்த தோற்றத்தை கை மணிக்கட்டுக்கு அளிக் கும். இதன் விலை ரூ.30 ஆயிரத்தில் இருந்து தொடங் குகிறது. 10 கிராமில் இருந்து கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் யூனிநாருக்கு 2வது இடம்
சென்னை, ஜூன் 8 –
இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதில் முன்னணி யில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான யூனிநார் தமிழ கத்தில் அதிக சந்தாதாரர் களை கொண்ட பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் புதிய சந்தாதாரர் கள் யூனிநாரை தேர்ந்தெடுத் தனர். இதன் மூலமாக இந் தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமாக இது திகழ்கிறது. தமிழ் நாட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நிமிடத்திற்கு 2பைசா என்ற திட்டம் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்திற்கு அதிக சந்தாதாரர்களை கொடுத் ததாக நிறுவனத்தின் தமிழ் நாடு வட்டார தலைமை வர்த்தக அதிகாரி சிவக் குமார் கூறினார்.
பொதிகை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி
சென்னை, ஜூன் 8 –
சென்னை எழும்பூர் – செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயிலில் (12661/12662) தாற் காலிகமாக ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: