சென்னை, ஜூன் 8-தற்கொலை செய்து கொண்ட கரும்பு விவசாயி முருகையனின் குடும்பத் துக்கு ரூ. 5 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனி சாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:நாகை மாவட்டம், மயி லாடுதுறை வட்டம், மாப டுகை கிராமத்தை சார்ந்த கரும்பு விவசாயி முருகை யன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். என்.பி.கே.ஆர் கூட்டு றவு சர்க்கரை ஆலைக்கு முருகையன் தனது கரும்பை பதிவு செய்திருந்தார். கூட்டு றவு சர்க்கரை ஆலை தொழி லாளர்களின் போராட் டத்தை மாநில அரசு முடி வுக்குக் கொண்டு வராமல் 35 நாட்கள் இழுத்தடித்தது. இதனால் கரும்பு அரவை நின்று போயிற்று. முருகைய னின் கரும்பையும் ஆலை யில் உரிய காலத்தில் வெட்டி அரைத்திட முடியாமல் போயிற்று. வறட்சி, மின் வெட்டால் கரும்பை பாது காத்திட முடியாமல் போன நிலையில், வாங்கிய கடனை யும் கட்ட முடியாமல் போனது. இந்த நிலையில்தான் கரும்பு விவசாயி முருகையன் துயர மான முடிவுக்கு சென்றுள் ளார். இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.தற்கொலை செய்து கொண்ட முருகையன் குடும் பத்திற்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங் கிட வேண்டும், அவர் வங்கி யில் பெற்ற கடனை தள்ளு படி செய்திட வேண்டும், கரும்பு விவசாயிகளை பாது காத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத் திட வேண்டுகிறோம்.
கோமுகி ஆலை விபத்து
விழுப்புரம் மாவட்டம், கச்சிராபாளையத்தில் உள்ள கோமுகி சர்க்கரை ஆலையில் குடோன் – 3ல் தீ பிடித்து சர்க்கரை மூட்டை கள் எரிந்து போயுள்ளன. தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் எம்.சின்னப்பா, மாநில செயலாளர் குருநாதன், ஆலை செயலாளர் சத்திய மூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர் ராஜன், மாநில துணைத் தலைவர் ஜெனார்த்தனன் ஆகி யோர் கோமுகி ஆலைக்கு சென்று பார்வையிட்டனர். குடோனில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. சர்க்கரை மூட் டைகள் சார்ட்டேஜ் ஏற்பட் டுள்ளது என விவசாயி களின் பிரதிநிதிகள் ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். இத்தகு சூழலில் சர்க்கரை மூட்டை கள் தீயில் எரிந்துள்ளது விவ சாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநில அரசு காவல்துறை யின் மூலம் புலன் விசா ரணை செய்து உண்மையை கண்டறிந்து, விவசாயிக ளுக்கு தெரிவித்திட வேண் டும்.மத்திய அரசின் அடிப் படை விலை (எஸ்எம்பி 2003-04) மற்றும் 5ஏ, விதிப் படியான லாபத்தில் பங்கு தொகையை தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் வழங் கிடவில்லை. விவசாயி களுக்கு வழங்கிட வேண் டிய லாப பங்கு பாக்கித் தொகையை வழங்கிட மாநில அரசு உத்தரவிட வேண்டுகிறோம்.1966ஆம் வருடத்தில் கரும்பு கட்டுப்பாடு சட் டத்தை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கரும்பு – சர்க் கரையை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலி லேயே தொடர அரசு உத்தர வாதம் செய்திட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.