திருச்சிராப்பள்ளி, ஜூன் 8-‘தண்ணீர் நம் உரிமை’ என்ற விழிப்புணர்வு பரப் புரை நிகழ்ச்சி கோவை முதல் திருச்சி வரை நடை பெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி திருச்சி புத் தூர் மாசுரபி சமுதாய கூடத் தில் வியாழனன்று மாலை நடைபெற்றது.நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.திருநாவுக் கரசு உரையாற்றினார்.தண்ணீர் பிரச்சனை மக்கள் இயக்கமாக நாடு தழுவிய இயக்கமாக மாற்றப் பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம் பெரிதும் அழிக்கப்பட்டி ருக்கிறது. இதில் மத்திய- மாநில அரசுகளுடன் பன் னாட்டு நிறுவனங்கள் – சமூக விரோதிகளும் இருக் கிறார்கள். விவசாய உற்பத்தி நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வளைத்து போடுகின்றன. தண்ணீரை வியாபாரப்பொருளாக மாற்றி விட்டனர். இப் போது மத்திய அரசு கொண்டுவரும் தண்ணீர் கொள்கை தண்ணீரை தனி யாருக்கு தாரைவார்க்கவே முன்மொழியப்பட்டிருக் கிறது. இதை எதிர்க்க வேண்டும் என்று திருநாவுக் கரசு தனது உரையில் குறிப் பிட்டார்.நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் இந்திரஜித், அமைப்பு- சாராத் தொழிலாளர் கூட் டமைப்பின் இணைச் செய லாளர் மகேஷ்வரன், தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்ட மைப்பின் அமைப்பாளர் தமிழகன், தமிழக விவசா யிகள் சங்கத்தை சேர்ந்த சின்னதுரை, கோவை அக் கறை அறக்கட்டளை இயக் குநர் பிருத்திவிராஜ், வழக்கு ரைஞர்கள் மார்ட்டின், கென்னடி, கமுருதீன் ஆகி யோரும் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: