தஞ்சாவூர், ஜூன் 8 -நாடு தழுவிய முழு வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கேவலமாக பேசி அசிங்கப்படுத்திய தஞ்சை கிழக்கு சரக காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயந்தியின் அணுகுமுறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.செந்தில் குமார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவக்குமார், எம். மாலதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாணவர் சங்க மாநில நிர்வாகி வி.கரி காலன், மாதர் சங்க செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நகரக்குழு உறுப்பினர்கள் த.முருகேசன், கா.அன்பு, பால்ராஜ், ஏ.கே.சுந்தர், ஜானகி, சரவணன், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: