துடியலூர், ஜூன் 8-கோவையில் திறந்தவெளியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்டஆட்சியர் மு.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள பாருடன் கூடிய டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள பார் திறந்த வெளியில் செயல்பட்டு வந்தது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பாரை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற ஆட்சியர் டாஸ்மாக் கடை மற்றும் பாரை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதேபோல், நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகர் 7 வது வார்டில் 34 லட்சம் செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை பார்வையிட்டார். மேலும், சிமெண்ட் கலவைகள் சரியான முறையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். அவரிடம் போரூராட்சி தலைவர் ஆனந்தன், பூச்சியூரிலிருந்து அரிஜன காலனி வழியாக செல்லும் பள்ளிம் பள்ளம் ராக்கியபாளையத்தில் இருந்து கிருஷ்ணாநகர் வரை தடுப்புச் சுவர் கட்ட நிதி ஒதுக்கும் படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு, அவர் இதுகுறித்துபரீசலனை செய்யப்படும் எனக் கூறினார்.ஆய்வின் போது, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply