பொறுப்பேற்பு
திருச்சிராப்பள்ளி.ஜூன்.8.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாக அலு வலராக சி.கல்யாணி பொறுப்பேற்றுக்கொண் டார். இதற்கு முன், அற நிலையத்துறையின் மதுரை மண்டல நகை சரிபார்ப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற் றிய சி.கல்யாணி இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று தற்போது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஸ்ரீரங் கம் கோயிலில் பொறுப் பேற்றுக் கொண்டார்.

ஓடையை தூர்வார வலியுறுத்தல்
கம்பம், ஜூன் 8-கம்பத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பேரவைக் கூட் டம் முருகன் தலைமை யில் நடைபெற்றது.பேரவையில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அபுதாகிர், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ஹஜ்முகமது ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். குறும்பட இயக்குநர் தமிழ் மணி ‘ஊடகங்களில் அர சியல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பேரவை யில் 70க்கும் மேற்பட் டோர்கலந்துகொண்டனர்.இதில் 17 பேர் கொ ண்ட ஏரியா குழு தேர்ந் தெடுக்கப்பட் டது. தலை வராக அய்யப்பன், செய லாளராக லெனின், பொரு ளாளராக காதர் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட் டனர்.கம்பத்தின் முக்கிய பகுதி களில் உள்ள சேனை ஓடையை தூர்வார வேண் டும். இங் குள்ள கழிவு களை அப்புறப் படுத்த வேண்டும். டெங்கு காய்ச் சலை தடுக்க சுகாதாரத் துறை போர்க்கால நடவடி க்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
தஞ்சாவூர், ஜூன் 8-தஞ்சாவூர் மாவட்டத் தில் பள்ளி சத்துணவு மை யங்களில் காலியாக உள்ள 96 அமைப்பாளர், 60 சமை யலர் மற்றும் 156 சமையல் உதவியாளர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க 5.6.2012 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.தற்போது அந்த கால அவகாசம் 20.6.2012ம்தேதி மாலை 5.45 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத் துணவு) இதனை தெரிவித் துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டத் தில் 14 ஊராட்சி ஒன்றி யங்களிலும், 3 நகராட்சி களிலும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை யினர் நலப்பள்ளிகளின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணி யிடங்களுக்கு தகுதியான வர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத் தில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டத் தின் கீழ் செயல்படும் அங் கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 148 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங் கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 65 குறு அங்கன்வாடி பணியாளர் கள், 157 உதவியாளர் பணி யிடங்கள் என மொத்தம் 370 அங்கன்வாடி பணி யிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் பட்டன. இப்பணியிடங் களுக் காக விண்ணப்பிக்க இம்மாதம் 10ஆம் தேதி கடைசிநாள் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய் யப்பட்டு வரும் 20ஆம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்களை பெறுவதற்கு கால நீட் டிப்பு செய்யப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: