டிம்பிள் போட்டியின்றி தேர்வு ஆவார்
லக்னோ, ஜூன் 8-உத்தரப்பிரதேச முதல் வர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், முதல்வர் அகி லேஷ் யாதவின் மனைவி யும் சமாஜ்வாதிகட்சி வேட்பாளருமான டிம் பிள் யாதவ் கன்னோஜ் மக் களவை தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்படுவார் என்பது தெளிவாகிவிட்டது. அவரை எதிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்த தசரத் ஷங்வார் (சன்யுக்த் சமாஜ்வாதி தள்) சஞ்சு கட்டியார் (சுயேட் சை), ஆகிய இருவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண் டனர். வேட்பு மனுக்க ளைத் திரும்பப்பெற ஜூன் 9 கடைசிநாளாகும்.காங்கிரசும் பகுஜன் கட்சியும் வேட்பாளர்க ளை நிறுத்தவில்லை. இங் குபோட்டியிட பாஜக முத லில் மறுத்துவிட்டது. கட் சிக்குள் எதிர்ப்பு வலுத்தவு டன் அப்பாவியான ஒரு வரை வேட்பாளராக அறி வித்தது. அவரும் குறிப்பிட்ட நாளைக்குள் வேட்புமனு வைத் தாக்கல் செய்யவில்லை.

கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு சிபிஐ சம்மன்
சென்னை, ஜூன் 8-இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் தலைவரும், இந் தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநருமான என்.சீனிவா சனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி யின் வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விசாரிக்க அவருக்கு சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது.சீனிவாசனை அடுத்த வாரம் அலுவலகத்திற்கு வருமாறு சிபிஐ கூறியுள் ளது. ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந் தபோது ஜெகன்மோக னின் நிறுவனங்களில் இந் தியா சிமெண்ட்ஸ் செய்த முதலீடுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. வேறு சில சிமெண்ட் நிறுவனங் களின் அதிகாரிகளையும் சிபிஐ அழைத்துள்ளது.சிமெண்ட் நிறுனங்க ளுக்கு ஆந்திர அரசால் நீர் மற்றும் சுண்ணாம்பு ஒதுக் கப்பட்டது பற்றி இவர்களி டம் சிபிஐ கேள்விகள் கேட்கும். இது குறித்து இந் தியா சிமெண்ட்ஸ் நிறுவ னம் ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. கடந்த காலங் களிலும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிபிஐ யைச் சந்தித்துள்ளனர். ஆந்திர அரசின் தொழில் கொள்கைகளுக்கு ஒப்ப வே தங்களுக்கு நீர் ஒதுக் கீடு செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

பெண் சிசுக்கொலை:மருத்துவர் கைது
நாசிக், ஜூன் 8-ஐந்து மாதக்கருவைக் கலைத்து பெண் சிசுவைக் கொலைசெய்த பெண் மருத்துவரையும், பெண் ணின் குடும்பத்தாரையும் காவல்துறை கைது செய் தது. மகாராஷ்டிரா மாநி லத்தின் துலே மாவட்டத் தில் இச்சம்பவம் நடந்தது.பிரதிபா ஞானேஸ்வர் பட்டீல் என்ற பெண், உள் ளூர் சுகாதாரக்குழுவிடம் அளித்த புகாரின்பேரில் பெண் மருத்துவர் பாயல் சிங்கவி கைது செய்யப்பட் டார். அவர் கருவில் இருந்த பெண் சிசுவை கருக்க லைப்பின் மூலம் கொன்று விட்டார் என்று பிரதிபா புகாரில் கூறியிருந்தார்.காவல்துறை நடத்திய விசாரணையின்படி, மருத் துவர் பாயல், பெண்ணின் கணவர், கணவரின் பெற் றோர், துலே பொது மருத் துவமனையின் பொறுப்பு மருத்துவர் ஆகியோர்மீது காவல்துறை வழக்கு தாக் கல் செய்துள்ளது.பெண் கருக்கலைப்பு தடுப்பு நடவடிக்கையின் கீழ் மாவட்ட சுகாதாரக் குழு ரேவாரில் உள்ள ஆறு மருத்துவமனைகளைச் சோதனையிட்டு ஒரு பாலி னம் அறிய உதவும் கருவி யைப் பூட்டியது.நாசிக் மாவட்டத்தில் 55 சோ னோகிராபி மையங்களை சோதனையிட்டதில் மூன்று மையங்களை பூட்டும்படி குழு உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: