ஆ.ராசா சென்னை வந்தார்
சென்னை: 2ஜி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா வெள்ளியன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக தொண்டர் கள் வரவேற்பளித்தனர். இதைத் தொடர்ந்து ராசா, திமுக தலைவர் கருணா நிதியை நேரில் சந்தித்தார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் 15 மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட் டிருந்த ஆ.ராசா சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை தமி ழகம் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனு மதியளித்தது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
சேலம் : சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய் திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது. இந்த வழக்கில் வீரபாண்டி ஆறு முகம் உள்பட 7 பேர் கைது செய்யட்டிருந் தனர். 5 பேர் தலைமறைவாக உள்ளனர். 7 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை யும், தலைமறைவாக உள்ள 5 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களையும் சேலம் முதன்மை நீதிமன்ற நீதிபதி வெள்ளியன்று தள்ளுபடி செய்தார்.

முன்னாள் தளபதிக்கு நீதிமன்றம் சம்மன்
புதுதில்லி: தரமற்ற ராணுவ வாகனங் கள் வாங்க தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர முயன்ற தாக முன்னாள் ராணுவ அதிகாரி தேஜிந் தர் சிங் மீது, ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங் கடந்த மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது புகார் கூறியிருந்தார். வி.கே.சிங் பதவியி லிருந்த போது, ஆதாரங்களுடன் கூறிய இந்த புகாரைத் தொடர்ந்து தேஜிந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.தேஜிந்தர் சிங் ராணுவ புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்தபோது 2010-ம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மீது அவதூறான புகார்களைக் கூறி வருவதால், வி.கே.சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி தில்லி நீதிமன்றத்தில் தேஜிந்தர் வழக்கு தொடர்ந் தார்.தேஜிந்தரின் வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் வி.கே.சிங் உள்பட 5 ராணுவ அதிகாரிகள் வரும் 20-ம் தேதி நேரில் ஆஜ ராக வேண்டுமென வெள்ளியன்று உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

அத்வானியுடன் சங்மா சந்திப்பு
புதுதில்லி : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ள பி.ஏ. சங்மா வெள்ளியன்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து ஆதரவு கோரினார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை : வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று சந்தித்து பேசினார்.சேலம் அங்கம்மாள் காலனிக்கு தீ வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.வெள்ளிக்கிழமை பகல் 12 மணி யளவில் வேலூர் சிறைக்கு வந்த ஸ்டாலின், அங்கு வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுகவினர் மீது அதிமுக அரசு பொய்வழக்குகள் போட்டு வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.

சிசுக்கொலை : ஸ்கேன் மையங்களில் மகாராஷ்டிர அரசு அதிரடி சோதனை
மும்பை: மகாராஷ்டிராவில் சிசுக் கொலை அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியானதையடுத்து ஸ்கேனிங் மையங் களில் அரசு அதிகாரிகள் வெள்ளியன்று அதிரடி சோதனை நடத்தினர்.சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பாலினத்தை கண்டறியும் முகாம்கள் குறித்து சோதனை நடத்துமாறு முதல்வர் பிருத்விராஜ் சவாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து நாசிக்கில் 55 ஸ்கேனிங் மையங்களில் சோதனையிட்ட அதிகாரி கள் 10 மையங்களுக்கு சீல்வைத்தனர். அதில் 5 மையங்கள் ஊரகப் பகுதிகளில் இயங்கிவந்தவை. மாலேகாவில் இயங்கி வந்த 5 மையங்களும் சீல்வைக்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: