அம்பத்தூர், ஜூன் 8 –
அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு மதுரா மேட்டூர் பிருந்தாவன் நகர் முல்லை தெருவில் வசித்த வர் ஜெயசீலன் (39). இவரது மனைவி ரோஸ் (35). ஜெய சீலன் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 7 இரவு ஜெயசீலன் வீட்டின் அருகே உள்ள காலியான கொட்டகையில் வெள்ளிக்கிழமை அதி காலை 2 மணியளவில் வந்து படுத்துள்ளார்.வெள்ளி காலை 6 மணியளவில் அந்த கொட்ட கையில் ஜெயசீலன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அம் பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையா ளர் நந்தகுமார், அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வா ளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் விசாரணை நடத்தி னார்கள். மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஞானசேகர் மற் றும் ஜெயசீலன் மனைவி ரோஸ் ஆகியோரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா இல்லையா என்பது தெரிய வரும்.கொலை செய்யப்பட்ட ஜெயசீலனுக்கு சாந்தி (20), நந்தினி (18) என்ற மகள்களும், லோகேஷ் (16) என்ற மக னும் உள்ளனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் தமிழ் மெலோடி விருதுகள்
சென்னை, ஜூன் 8 –
சென்னையில் தமிழ் பண்பலை வானொலி நிலை யங்களில் ஒன்றான பிக் 92.7 எஃப்எம் பிக் தமிழ் மெ லோடி 2012 என்ற விருதுகளை வழங்க உள்ளது.இந்த விருதுகள் சிறந்த தமிழ் திரைப்படப் பாடல் களை பாடியுள்ள பாடகர்கள், பாடகிகளுக்கும் அதற்கு இசை யமைத்த இசையமைப்பாளர்களுக்கும் வழங் கப்படவுள்ளது.இதற்கான சின்னம் (லோகோ) அறி முக விழாவில் இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், ஜேம்ஸ் வசந்தன், பாடகர் உண்ணி கிருஷ்ணன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரபல பாடகர் எஸ். பி.பாலசுப்பிரமணியன் தமிழ் திரைப்பட உலகிற்கு ஆற்றியுள்ள சிறந்த சேவையை பாராட்டி அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது. 16 பிரிவுகளில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஒரு விருது மட்டும் விருது வழங்கும் விழாவிலேயே அறிவிக்கப்படும் என்று 92.7 பிக் எஃப் எம் நிர்வா கிகள் தெரிவித்தனர்.
பட்டாபிராம் அருகே தண்டவாளத்தில் விரிசல்
அம்பத்தூர், ஜூன் 8 –
ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே வெள்ளியன்று அதிகாலை 4.30 மனிக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்ட வாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதை உடனடியாக ஊழி யர்கள் கண்டுபிடித்தால் அவ்வழியாக வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ், பெங்களூர் கௌகாத்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை புறநகர் ரயில்கள் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன.இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. பின்னர் ஊழியர்கள் விரி சலை காலை 6 மணியளவில் சரி செய்தனர். அதன் பின்னர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஊழியர்கள் குறித்த நேரத்தில் விரிசலை கண்டு பிடித் ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

%d bloggers like this: