மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு உண்டு என்று குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, அது குறித்து விசாரித்து தீர்ப்புக்கூற வேண்டியது நீதிமன்றம்தான். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் துவங்கி, அனைத்து காங்கிரஸ் தலைவர் களும் ஆஜராகி, சிதம்பரம் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வழங்கினர். உச்சகட்டமாக ப.சிதம்பரம் பேசும்போது, என் நேர்மையை சந்தேகிப்பதைவிட என் முது கில் குத்துங்கள் என்று வசனம் பேசினார். இவ ருடைய நேர்மை பல விஷயங்களில் சந்தேகத் திற்கு இடமாகவே உள்ளது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இவர் வெற்றிபெற்ற விதம் குறித்து அப்போதே பலத்த சந்தேகம் எழுந்தது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் வெற்றியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். ‘நேர்மையாளரும்’, வழக்கறிஞருமான ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கை நேர்மை யாக எதிர்கொள்ளவில்லை.
மாறாக வழக் கையே ரத்து செய்யவேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் இவரது வாதத்தை ஏற்க மறுத்து விசாரணையை எதிர்கொள்ளுமாறு உயர்நீதிமன் றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என் றும், தேவைப்படும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.சிதம்பரம் மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுக்களை நீக்கிவிடலாம் என்று கூறியுள்ள நீதிமன்றம், அவரது வெற்றியில் முறைகேடு உள்ளது என்ற குற்றச்சாட்டை தற்போது ரத்து செய்யமுடியாது; முழுமையான விசாரணையில்தான் இது தெளிவாகும் என்றும் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் வழக்கம் போல அவர் ராஜினாமா செய்ய மறுத்துள்ள தோடு, இது ஒன்றும் கிரிமினல் குற்றச்சாட்டு அல்ல என்று கூறியுள்ளார். இதேபோன்ற குற்றச் சாட்டுகள் நாடாளுமன்றத்தில் உள்ள பலர் மீதும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.சட்டப்பூர்வமாக அவர் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் தார்மீக ரீதியில் தேர்தல் வழக்கில் ஆஜராக வேண்டிய ப.சிதம்பரம், உள் துறை அமைச்சர் பொறுப்பில் நீடிப்பது பொருத்த மானது அல்ல.
தாமாக முன்வந்து ராஜினாமா செய்து, அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது நிரூபிக்கப்படும் வரை காத் திருப்பதே பொருத்தமாக இருக்கும்.மேலும், இத்தகைய தேர்தல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். சம்பந்தப்பட்டவரின் பதவிக்காலம் முடிந்தபிறகும் கூட சில வழக்கு களில் தீர்ப்பு வந்துள்ளது. இத்தகைய தீர்ப்பு களுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் போய்விடும். ப.சிதம்பரம் தொடர்புடைய இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும். அதுவரை அவர் பொறுப்பிலிருந்து விலகி நிற்க வேண்டும். ஆனால் இத்தகைய உயரிய முன் மாதிரியை அவரிடம் எதிர்பார்க்க முடியாது.

Leave A Reply

%d bloggers like this: