கள்ளக்குறிச்சி, ஜூன் 8-
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் திம்மலை மவுண்ட்பார்க் தனியார் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட் டத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.இந்த பள்ளியில் மொத் தம் 417 பேர் தேர்வு எழுதி னர். இவர்கள் அனை வருமே தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவி பாக்கிய லட் சுமி தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலத்தில் 98, கணக்கு 97, அறிவியல் 100, சமூக அறி வியல் 100 மொத்தம் 492 மதிப்பெண் எடுத்துள்ளார். அதேபோல், மாணவன் தீபக்ராஜ் தமிழ் 96, ஆங் கிலம் 99, கணக்கு 99, அறிவி யல் 99, சமூக அறிவியல் 99 ஆக மொத்தம் 492 மதிப் பெண்கள் பெற்று இரு வரும் மாவட்ட அளவில் இரண்டாவதாக வந்துள் ளனர்.மாணவி சுபஸ்ரீ ஆங் கிலத்தில் 100க்கு 100 மதிப் பெண்கள் எடுத்துள்ளார். மேலும். இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் 21 பேரும், அறிவியலில் 8 பேரும், கணிதத்தில் 2 பேரும் ஆங்கிலத்தில் ஒரு வரும் 100க்கு 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்.இத்தகைய சாதனை களை நிகழ்த்திய மாணவர் களை பள்ளியின் தாளாளர் அருணாமணிமாறன், முதல் வர் கலைச் செல்வி, துணை முதல்வர்கள் முத்துக்குமார், பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: