ஜனாதிபதி வேட்பாளர் என்று பேப்பரில்தான் பார்க்கிறேன் – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.ச.சா – இதுக்கே இப்புடி சந்தோஷப்படுறீங்களே… பல வருஷமா பிரதமர் வேட்பாளர்னு சொல்லிக்கிட்ட அத்வானிய நெனச்சுப் பாருங்களேன்…
* * *
திட்டக்குழு அலுவலக கழிப்பறைகளை நவீனப்படுத்தரூ.35 லட்சம் செலவு – செய்தி.ச.சா – இதுதான் நவீன தாராளமயமோ….??
* * *
மக்களின் வரிப்பணத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியாவுக்கு அளிக்க முடியாது – மத்திய அமைச்சர் அஜித்சிங்.ச.சா – ஆமா… தனியார் முதலாளிகளுக்கு மட்டும்தான் தாரை வார்க்க முடியும்… அப்படித்தானே…??
* * *
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, மதவாதத்துக்கு ஆதரவாக பல செயல்களைச் செய்துள்ளார் – குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.ச.சா – உங்களோட ஏற்பாட்டுல பல கொலைகளே நடந்துருக்குன்னுதான தெரிய வந்துருக்கு…?

Leave a Reply

You must be logged in to post a comment.