திருச்சுழி, ஜூன் 8-கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சி தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இந் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள் ளாட்சித் தேர்தலில் வி.கருப் பன் வெற்றி பெற்றார். இந்நிலை யில் அவரை செயல்படவிடா மல் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தடுப்பதாக டி.ஜி.பி ராமானுஜத்திடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பாலாஜி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நஜ்மல்ஹோடா ஆகியோர் கொட்டக்கச்சியேந் தல் சென்று விசாரணை நடத் தினர். முடிவில் அனைவரும் ஊராட்சித் தலைவருக்கு ஒத் துழைப்பு தர வேண்டுமென வும் கூறினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் அ.சேகர், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எஸ். ஞானகுரு, மாவட்டத் தலைவர் சி.முருகேசன், மாவட்ட பொரு ளாளர் எம்.முத்துக்குமார், மாவட் டக் குழு உறுப்பினர்கள் வி. முருகன், அன்புச் செல்வன், தங்கராஜ் ஆகியோர் கொட்டக் கச்சியேந்தல் சென்றனர். பஞ்சாயத்து தலைவர் வி. கருப்பனிடம் விசாரித்த போது, 100 நாள் வேலை திட்டத்தில் 90 ரூபாய் சம்பளமாக வழங்கப் பட்ட போது,திடீரெனதுணைத் தலைவர் உமா மகேஸ்வரியின் கணவர் மாரிக்கண்ணு ரூ.80 ஆக மாற்றி அனைவருக்கும் பணப் பட்டு வாடா செய்துள் ளார். இதற்கு ஊராட்சி எழுத்தர் ரவீந்திரனும் துணையாக இருந் துள்ளார்.
இதுகுறித்து பிரச் சனை ஏற்பட்டது. எனவே, உரிய சம்பளத்தை வழங்கும் படி கூறினேன். என்னிடம் 100 நாள் வேலை எங்கு நடக் கிறது என்ற தகவலை கூட கூற மறுக்கின்றனர். பணித் தலைவரிடம் சென்று கேட் டால் தான் சொல்வார்கள். பணம் பெறுவதற்காக வெறும் கையெழுத்து மட்டும் தான் போடச் சொல்வார்கள். கிராம சபை கூட்டத்தில் அரசு அதி காரிகள் உள்ள வரையில் தான் அனைவரோடும் சேர்ந்து உட் கார முடியும். அவர்கள் போன அடுத்த நிமிடமே, பிரசிடன்ட் ஆனதும் தைரியம் வந்துடுச் சா? எனக் கூறி நிற்க வைப் பார்கள். பஞ்சாயத்து அலுவல கத்தில் உட்கார கூட நாற்காலி கிடையாது. ஏற்கனவே இருந் தவற்றை காணோம் என ஊராட்சி எழுத்தர் கூறிவிட் டார். 2 ஊராட்சி உறுப்பினர்கள் மட்டும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஊருக்குள் உள்ள டீக்கடையில் 2 டம்ளர் உள் ளது. சாதி ஆதிக்க சமூகத் தைச் சேர்ந்த கந்தசாமி என்ப வர் பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்தார். இதை நான் ஆட்சியரிடமும் கூறி னேன். இதுபோக சாதி ஆதிக்க வாதிகள் பலரும் கொலை மிரட் டல் விடுக்கின்றனர். எனவே எனக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வேண்டும். கருப்பனின் மனைவி சித்ரா கூறியதாவது: 100 நாள் வேலைக்கு சென்றேன். சம்ப ளம் குறைவாக வந்தாலோ அல்லது தாமதம் ஏற்பட்டா லோ சாதியைக்கூறி இழிவாகப் பேசுவார்கள். தற்போது நான் அந்த வேலைக்கும் போவதில் லை. எனது கணவரும் கூலி வேலைக்கு முன்பு சென்று வந் தார். தற்போது அங்கும் போவ தில்லை.இதனால் 3 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகி றேன் எனக் கூறினார்.
கண்டனம்
தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.ஞானகுரு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-தலித் பஞ்சாயத்து தலை வர் வி.கருப்பனின் ஜனநாயக செயல்பாட்டை தடுக்கும் ஆதிக்க சமூகத்தினர் மீது மாவட்ட நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட காவல்துறை வழங்க வேண்டும். மேலும் பல்வேறு வடிவங்க ளில் இங்கு தீண்டாமைக் கொடுமைகள் உள்ளன. ஊரில் உள்ள முடிதிருத்து பவர் ஆதிக்க சமூ கத்தின ருக்கு மட்டுமே சவரம் செய்ய வேண்டுமாம். தலித் மக்க ளுக்கு முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாதென ஆதிக்க சாதியினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதனால் பஞ்சாயத்து தலைவர் 11 கி.மீ தூரத்தில் உள்ள மானாமதுரை அல்லது நரிக்குடிக்கு சென்று தான் சவரம் செய்து கொள்ள வேண்டும். ஊரில் உள்ள அங் கன்வாடியில் காலனி வீட்டு பிள்ளைகளுக்கு சாப்பிடுவ தற்கு ஈயத்தினால் ஆன தனி தட்டுகள் தருகிறார்கள். மற்ற குழந்தைகளிடம் எவர் சில்வர் தட்டுகள் வழங்குகின்றனர். பச்சிளம் குழந்தைகளிடம் கூட சாதி பாகுபாடு பார்க்கும் கொடூரம் கொட்டக்கச்சியேந் தல் கிராமத்தில் உள்ளது. தலித் மக்களுக்கு பிளாஸ் டிக் டம்ளரில் தான் டீ தரு வார்கள். அதிகாரிகள் சத்தம் போட்டதால் இப்போது சில கண்ணாடி டம்ளர்களின் பின் பகுதியில் சிவப்பு நிற பெயிண்டால் அடையாளம் வைத்து உள்ளனர். அதில் தான் தலித் மக்கள் டீ குடிக்க வேண்டும். இப்படி நவீன முறையில் தீண்டாமைக் கொ டுமை கொட்டக்கச்சி யேந்தல் கிராமத்தில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு இப்பிரச்ச னைகளை தீர்க்க வேண்டும். தீண்டாமைக் கொடுமைகளுக் கும் முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.