திருவண்ணாமலை, ஜூன் 8-
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்து, அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களாக பணி செய்துவரும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஏற்கெனவே அரசு அறிவித்தபடி மூன்று மாத முன்பணமும் மற்றும் டிசம்பர் 2011 முதல் நடப்பு மாதம் வரை மாதச் சந்தாவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தவறாமல் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்த தொகையில் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு உரியத் தொகை செலுத்தாமல் தாமதம் செய்துவரும் கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசு நிர்ணயித்த தொகையான 70-க்கு மேல் சந்தா தாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் அத்தகைய கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.அரசு நிர்ணயித்த தொகையான 70-க்கு மேல் சந்தா தாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுமானால், அதுகுறித்த புகாரை தகவல் மையம் 04175-233344, 04175-233345 என்ற எண்களுக்கும். மாவட்ட ஆட்சியர், திரு வண்ணாமலை 94441 37000 என்ற எண்ணுக்கும் மற்றும் துணை மேலாளர், கேபிள் டிவி, திருவண்ணாமலை 94980 02594 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக் கலாம்.

Leave A Reply

%d bloggers like this: