சென்னை, ஜூன் 8 –
கால்நடை வளர்ப்பில் அறிவியல் அணுகுமுறை கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டுள்ளது.ஊரக விவசாயிகளின் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்துவ தில் கால்நடை உற்பத்தி நவீன தொழில்நுட்பங்கள் என்ற செயலரங்கம் வெள்ளி யன்று (ஜூன் 8) சென்னை யில் நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு உரை யாற்றிய தமிழக அரசின் முதன்மை செயலாளர் கே. சண்முகம் விவசாயத்திற் கும் கால்நடை வளர்ப்புக் கும் இடையேயான பங்க ளிப்பை விவரித்தார்.தமிழக அரசின் விலை யில்லா ஆடு – மாடு வழங் கும் திட்டத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், “அறிவியல் ரீதியாக கால் நடைகள் வளர்க்கப்படு மானால் அவற்றின் உற்பத்தி திறன் பல மடங்காக பெரு கும்.
அதன் மூலம் உற்பத்தி யாளர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கிய தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் இரா. பிரபாகரன், கிராம மக்க ளின் வாழ்வாதாரத்தில் கால் நடை வளர்ப்பு முக்கிய மான பங்கு வகிக்கிறது என்று கூறினார்.தமிழக கால்நடை பரா மரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலா ளர் தீப்சிங் பேடி, கால் நடை பராமரிப்பு துறை இயக்குனர் முனைவர் ஆர். பழனிசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். சென்னை கால்நடை மருத்துவ கல் லூரி முதல்வர் பி.முரளி மனோகர் வரவேற்றார், முனைவர் தி.சிவக்குமார் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியை முன் னிட்டு கால்நடை வளர்ப் பில் நவீன தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. செயல் அரங்கில் பல்வேறு வல்லுனர்கள் பங்கேற்று கால்நடை தீவன உற்பத்தி, கால்நடை உற்பத்தி, நோய் தடுப்பு, கால் நடைகளுக் கான மூலிகை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: