திருப்பூர், ஜூன். 8- திருப்பூர் சரளைக்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உறுப்பினர் வண்டிக்காரர் என்கிற பழனிசாமி (வயது 60) வியாழனன்று இரவு கால மானார். சிறிது காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு மனைவி சரோஜினி, மகன் கள் ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.காமராஜ், வடக்கு மாநகரச் செயலா ளர் என்.கோபாலகிருஷ் ணன், மாநகரக்குழு உறுப் பினர் கே.நாகராஜ், எஸ். ராஜேந்திரன், ஒய்.அன்பு, த.நாகராஜ், சிஐடியு மாவட் டச் செயலாளர் எம்.சந்தி ரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சபுரோ எம்.ரங்கசாமி, எம்.கோவிந் தசாமி உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத் தினர். அவரது உடல் திருப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: