கடலூர், ஜூன் 8-
தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகளை நல்லோர் பசுமை திட்டம் மூலம் நடப் பட வேண்டும் என்று முன் னாள் ஜனாதிபதி ஏபிஜே. அப்துல்கலாம் வேண்டு கோள் விடுத்தார்.சுற்றுச் சூழலை பாது காக்க பசுமை கலாம் திட் டத்தின் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இதன் நிறைவு விழா கடலூரில் நடைபெற் றது. இவ்விழாவிற்கு வருகை தந்த கலாம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே 10 லட்சத்து ஒன்றாவது மரக் கன்றினை நட்டார். பின் னர் கிருஷ்ணசாமி கல்லூரி யில் நடைபெற்ற விழாவில், மரக்கன்று நடுவதற்கு உரு துணையாக இருந்த நடிகர் விவேக் உள்ளிட்டவர்களை பாராட்டி சான்றிதழ் வழங் கினார். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துணி பைகளை கலாம் வெளியிட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு பெற்றுக் கொண்டார்.பின்னர் கலாம் பேசிய தாவது;நாம் ஒவ்வொருவரும் 10 மரங்களை நட்டு 10 கோடி மரங்களை நடுவோம் இது மாறி வரும் தட்பவெட்ப சூழலை சமாளித்து நம் எதிர் கால வாழ்க்கையை வளப் படுத்த இயலும். நடிகர் விவேக் இத்திட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் அவரது நண்பர், திரையுலகத் தினர் ஆகியோரை ஒருங் கிணைத்து தமிழகத்தில் 1 கோடி மரங்களை நட்டு வளர்த்து பசுமை சூழலை உருவாக்க வேண்டும். அப்ப டிப்பட்ட திட்டத் திற்கு நல் வோர் பசுமை திட்டம் என்ற பெயரை சூட்டி அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொள் ளும் வகையில் ஆரம்பிக்க வேண்டும் என்றார் கலாம்.

Leave A Reply