சென்னை, ஜூன் 8-ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்று 13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவிப்பார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.முன்னதாக தில்லி சென்ற ஸ்டாலின் வியாழனன்று பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா வையும் சந்தித்து பேசினார்.பின்னர் நள்ளிரவு சென்னை திரும்பிய ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவுசெய்யும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் வேட்பாளர் யார் என்பதை 13-ம் தேதி அறிவிப்பார் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: