புதுதில்லி, ஜூன் 8-அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி யாக தன்னை அறிவித்துகொள்வதற்கான முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்துவ தற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அடுத்த வாரம் அமெ ரிக்கா செல்கிறார்.ஜூன் 11ம் தேதி வாஷிங்டனை அடை யும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனு டன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நான்கு நாள் பயணத்தின்போது அதிகாரப்பூர்வ மான முறையிலும், அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்துகொள்கிறார் என வாஷிங்டனிலி ருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த சந்திப்புகளில் என்ன பேசப் பட இருக்கிறது என்பது குறித்து புதுதில்லி அதிகார வட்டாரம் தெரிவிக்கமறுக்கிறது. அமைச்சர் கிருஷ்ணாவுடன் அறிவி யல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச் சர் விலாஸ்ராவ் தேஷ்முக், சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை யமைச்சர் கிருஷ்ண தீரத் உள்ளிட்டோர் செல்கின்றனர். (பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.