ஐ.நா.சபை, ஜூன் 8-சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண ராணுவ ரீதியாக அணுகினால் அது அந்நாட்டில் உள்நாட்டுப்போரை மேலும் தீவிரமடையச் செய்யவே வழி செய்யும் என்றும், இது அரபுப் பிரதேசம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இந்தியா மிகவும் கவலைப்படுகிறது என்றும், அங்கு நடக்கும் அனைத்துவிதமான வன்முறைகளையும் – அந்த வன்முறை களை எவர் நிகழ்த்தினாலும்வன்மையாகக் கண்டிப்பதாக வும் ஐ.நா. பொதுச் சபையில் பேசிய இந்தியாவுக்கான நிரந் தரத் தூதரர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.எண்ணெய்வளம் மிக்க அரேபிய நாடுகளில் ஒன்றான சிரியாவை கைப்பற்றும் நோக்கத்தோடு அந்நாட்டில் திட்டமிட்டே உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்கியுள் ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை திசை திருப்பி ஒரு வன்முறைப்போராட்டமாக, ஆயுதந்தாங்கிய போராட்ட மாக ஏகாதிபத்திய சக்திகள் மாற்றியுள்ளன. லிபியாவில் இதேபோன்ற நடவடிக்கையை மேற் கொண்டு, போராட்டக் காரர்களை அந்நாட்டு அரசு ஒடுக்குவதாகவும் அந்த ஒடுக்குமுறையிலிருந்து அம்மக் களைக் காப்பாற்றப்போவதாகவும் கூறி லிபியா மீது படையெடுத்து, அந்நாட்டின் ஜனாதிபதி கடாபியை கொன்று, இறுதியில் அந்நாட்டையே கைப்பற்றியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இதேபோன்ற சூழலை சிரியாவிலும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சக்திகள், நிலைமை யை மேலும் மோசமடையச் செய்து, அதன் பின்னர் அந் நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக ஐ.நா. பாது காப்புக் கவுன்சிலின் அனுமதியை பெற முனைகின்றன.இந்நிலையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன் னான் தலைமையில் ஐ.நா. சிறப்புத் தூதர்கள் அடங்கிய குழு முயற்சித்தது. எனினும் அந்த முயற்சிகளை அமெரிக்க ஆதரவு சக்திகள் நிராகரித்தன. இது தொடர்பாக ஐ.நா.சபையில் பேசிய கோபி அன்னான், தான் முன்வைத்த 6 அம்ச அமைதித்திட்டத்தை சிரியாவில் அமல்படுத்த முடியவில்லை என்றும், அங்கு முழுமையான உள்நாட்டுப் போர் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார்.இதே விதமான எச்சரிக்கையை இந்தியாவும் முன்வைத்தது. எனினும் அமெரிக்காவின் முஸ்தீபுகளை இருவரும் சுட்டிக்காட்டவில்லை.

Leave A Reply

%d bloggers like this: