சென்னை, ஜூன் 8-உயர்நீதிமன்ற வளாகத் தில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங் கரை விளக்கம் பராமரிக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 1844 ம் ஆண்டு கட்டப்பட்டு புரா தன சின்னமாக விளங்கும் கலங்கரை விளக்கம் கவனிப் பாரின்றி கிடப்பதாக முதல் வர் ஜெயலலிதா கவனத் துக்கு கொண்டு வரப்பட் டது. இதையடுத்து, உடனடி யாக அதை பராமரிப்பதற் கான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் உத் தரவிட்டுள்ளார்.கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக 1844 ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் கலங் கரை விளக்கம் அமைக்கப் பட்டது. இதை பராமரிக் கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. 1977 ல் காமராஜர் சாலையில் புதிய கலங்கரை விளக்கம் அமைக் கப்பட்டதால், உயர்நீதி மன்ற கலங்கரை விளக்கம் பயன்படுத்தப்படவில்லை. அதனால், பராமரிப்பு பணியை மத்திய அரசு கைவிட்டுவிட்டது.உயர்நீதிமன்ற வளாகத் தில் உள்ள கட்டுமான அமைப்புகளை பராமரிப் பது, புதுப்பிப்பது ஆகிய பணிகள், நீதிபதி ஜோதி மணி தலைமையில் இயங் கும் கட்டடக் குழுவின் ஒப்பு தலுக்கு பிறகே மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில், புராதன சின்ன மாக விளங்கும் அந்த கலங் கரை விளக்கத்தை பராமரிப் பதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற கட்டிடக்குழு வின் ஒப்புதல் பெற்று உடனடி யாக எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: