புதுக்கோட்டை, ஜூன்8புதுக்கோட்டை அருகே திருமணமாகி இரண்டே மாதங்களில் இளம் பெண் தீயில் கருகி இறந்தது தொடர்பான வழக்கை சிபி சிஐடிக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் டி.சலோமி இதுதொடர்பாக தனது அறிக்கையில் குறிப்பிட் டிருப்பதாவது:தஞ்சாவூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த சையது முகமது மகள் ஆயிஷா பர்வீன். இவருக் கும் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத் தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அலாவுதீனுக்கும் கடந்த 4.4.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே அலாவுதீன் வேலைதேடி வெளிநாடு சென்றுவிட் டார். அதன் பிறகு மாம னார், மாமியார், அலாவு தீனின் அண்ணன் மனைவி ரம்ஜான் ஆகியோரோடு ஆயிஷா பர்வீன் வசித்து வந் துள்ளார்.
அப்போது மாமி யார் ஆயிஷாபர்வீனை தாய்வீட்டிலிருந்து பணம் கொண்டுவா, நகைவாங்கி வா என பலவிதங்களில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து ஆயிஷா பர்வீன் தனது கணவரிடம் கூறியபோது, தனது தாய் சொல்வதை ஒழுங்காக கேள் என அவரும் ஆயிஷா பர் வீனை மிரட்டியுள்ளார். இதனால் வெறுப்படைந்த ஆயிஷாபர்வீன் தனது தாய் வீட்டிக்குச் சென்றுள்ளார். அவர்களோ புகுந்த வீடு என்றால் அப்படி, இப்படித் தான் இருக்கும், பொறுத் துப்போகும்படி அறி வுறுத்தி கணவர் வீட்டி லேயே கொண்டு வந்து விட் டுள்ளனர். வேறு வழியின்றி கணவன் வீட்டிலேயே காலத்தைக் கடத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன் வெளி நாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பியுள்ளார். கணவர் வந்த பிறகாவது தனக்கு விடிவு கிடைக்கும் என நினைத்திருந்த ஆயிஷா பர்வீனுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படும் விதமாக தாய் மற்றும் தனது அண் ணன் மனைவியோடு சேர்ந்து கொண்டு, தாங்கள் சொல்படி கேட்கவில்லை யென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் அலாவுதீனும் மிரட்டியுள்ளார்.இத்தகவலை கடந்த 5.5.2012 அன்று ஆயிஷா பர்வீன் தனது தாய்க்கு தொலைபேசியில் தெரி வித்து நான் அங்கு வந்து விடுகிறேன் எனக் கூறியுள் ளார். அதற்கு அவரது தாய், நாளை காலை அங்கு வந்து நானே கூட்டி வருகிறேன் எனவும் அதுவரை பொறு மையாக இருக்கும் படியும் கூறியுள்ளார்.இந்நிலையில் அன்று மதியம் மூன்று மணியள வில் ஆயிஷாபர்வீன் தீயில் கருகிக்கிடப்பதாக பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஆயி ஷாவின் தாயார் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக் கப்பட்டது. திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன தால் ஆர்டிஓ விசார ணைக்கு உத்தரவிடப்பட் டது. ஆர்டிஓ விசாரணை யில் அலாவுதீனின் அண் ணன் மனைவிக்கும், ஆயி ஷாபர்வீனுக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஆயிஷாபர்வீன் தற் கொலை செய்து கொண் டார் எனக் கூறப்பட் டுள்ளது.ஆனால், ஆயிஷா பர்வீ னின் தாய்வீட்டாரோ, தனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. இது நிச் சயமாக கொலையாகத்தான் இருக்கும் என உறுதியாகக் கூறுகின்றனர். அதற்குத் தகுந்தார் போல காவல் துறையினரும் இச்சம்பவத் தில் உறுதியான நடவடிக் கை எடுக்காமல், கட்டப்பஞ் சாயத்து செய்தே பிரச்சனை யை நீர்த்துப் போக வைக்க முயற்சிக்கின்றனர்.எனவே இப்பிரச்சனை யில் மாவட்ட காவல்துறை யினரின் அலட்சியப் போக்கை கவனத்தில் கொண்டு தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்ற வேண்டு மென சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: