சென்னை, ஜூன் 8 -12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான நட வடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று குழந் தைகளின் பயிற்சிப் பட்டறை வலியுறுத்தியுள்ளது.இச்சட்டத்தின் கீழ் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் கல்வியை உறுதிசெய்யும் விதத்தில் நிதி ஒதுக்கீடு அமைய வேண்டுமென்றும் குழந்தைகள் வலி யுறுத்தினர். விழுப்புரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் குழந்தை உரிமைகளுக்கான பல்வேறு அமைப்புகள் இணைந்து மாநில திட்டக்குழுவிற்கு கோரிக்கைகள் விடுக்கும் விதத் தில் கடந்த 2 நாட்களாக குழந்தைகளின் பட்டறை ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் கலந்து கொண்டு குழந்தைகளோடு உரையாடினார்.தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், மீனவர்கள், இடம்பெயர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றவர்கள், பழங்குடியினத்தவர்கள், அகதிகளின் குடும் பங்களைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் என சமூகத்தில் மிகவும் புறக்கணிக் கப்பட்ட நிலையில் உள்ள அனைத்து விதமான குழந்தைகளின் நலன்களையும்,அவர்களது கல்வி உரிமையையும் பாது காக்கும் விதத்தில் 12வது ஐந்தாண்டு திட்டம் கவனம் செலுத்த வேண்டுமென இம்முகாமில் வலியுறுத்தப்பட்டது. (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: