பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை மகேஷ் பூபதி-சானியா மிர்சா இணை கைப்பற்றியது. பூபதியின் பிறந்தநாள் இனிமையாக முடிந்தது.போலந்து -மெக்சிகோ இணையான கிளாடியா ஜேன்ஸ்- இக்னாசிக் மற்றும் சான்டியாகோ கோன்சாலஸ் அணியை இந்திய இணை 7-6, 6-1 என வென்று கோப்பையைக் கைப்பற்றியது. பயஸ் வெஸ்னினா இணையை அரை இறுதியில் வென்ற கிளாடியஸ் – கோன்சாலஸ் இணை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களிடம் தோற்றது. இது இவர்களுடைய இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். 2009ம் ஆண்டில் இவர்கள் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டத்தை வென்றுள்ளனர்.பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட கோப்பையைக் கண்டு பூபதி-சானியா இணை வியப்படைந்தது. அவர்களிடம் அளிக்கப்பட்ட கோப்பை இரண்டாம் இடத்துக்குரியது. சானியா விஷமச்சிரிப்புடன் கோப்பையை கோன்சோலஸிடம் கொடுத்தார். அதற்குப்பின்தான் அதிகாரிகள் தங்கள் தவறை உணர்ந்து உரிய கோப்பையை அவர்களிடம் அளித்தனர்.ஆஸ்திரேலியாவின் ஸ்டோசுர் அரை இறுதியில் தோற்றுவிட்டார். இத்தாலியின் சாரா எர்ரானி 7-5,1-6, 6-3 என வென்றார். முதல் செட்டில் ஸ்டோசுர் கடுமையாகப் போராடித் தோற்றார். இரண்டாவது செட்டை வெஞ்சினத்துடன் ஆடி வென்ற ஸ்டோசுர் மூன்றாவது செட்டில் கூர்மையாக ஆடவில்லை சாரா எர்ரானி சிரமமின்றி வென்றார்.மற்றொரு அரை இறுதியில் சரபோவா, 6-3, 6-3 என்ற செட்டுகளில் பெட்ரா கேவிட்டோவாவை வென்றார். இந்த வெற்றியின் பலனாக அவர் உலக முதன்மை மகளிர் வீரர் தகுதியை மீண்டும் அடைகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.