உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பென் பெர்னான்கே தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்காவின் ஏற்றுமதி, வர்த்தக மற்றும் நுகர்வோர் நம்பிக்கை இழப்பு மற்றும் அமெரிக்க நிதி சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க கூட்டு பொருளாதாரக் குழு மாநாட்டில் அவர் தெரிவித்தார். எனவே, அமெரிக்காவின் நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரத்தை நன்கு கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, அமெரிக்கா மேற்கொண்டுள்ள பட்ஜெட் நிதி குறைப்பு மற்றும் வரி உயர்வு மிக முக்கிய காரணமாக திகழ்கிறது. மேலும் பொருளாதாரச் சுமை அதிகரித்தால், அதனை தடுப்பதற்கான உதவியை மத்திய வங்கியின் அனுமதியின்றி ரிசர்வ் வங்கி மேற்கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார். அமெரிக்கா தனது பட்ஜெட் பற்றாக்குறையை சீர் செய்யாவிட்டால் இப்பொருளாதாரச் சுமை மேலும் மோசமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: