அதிக அளவு உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு ஆபத்தே என கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். பொதுவாக அதிக உடல்எடை கொண்டவர்கள் தங்களது எடையைக் குறைக்க எண்ணி, உணவுக்கட்டுபாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவிதமாக எடைக்குறைப்பு முறையை மேற்கொள்கின்றனர். நாள் ஒன்றிற்கு ஒரு மணிநேரம் பயிற்சி செய்வதே இதயத்திற்கு பாதுகாப்பு ஆகும். அதற்கு மேல் உடற்பயிற்சி செய்தால், நாளடைவில் அது இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாகஇருப்பவர்கள் அதிதீவிர பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபடும்போது, இதயத்துடிப்பு 120 ஆக உயர்கிறது. இதனால் இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. உடற்பயிற்சி என்பது பொதுவாக சுகாதார வாழ்வுக்கு நல்லதுதான். எனினும் அதிகமாக போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கி.மு 490ம் ஆண்டில் ஓர் இளம் கிரேக்கச் செய்தியாளர் 2 நாட்களில் 175 மைல்கள் ஓடி வந்த பின்னர் திடீரென இறந்தார். இவரது இறப்பே நீண்ட தூர ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட முதல் இதயம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: