தஞ்சாவூர், ஜூன் 8 -அங்கன்வாடி ஊழியர் களின் வாரவிடுமுறையை பறிக்கும் வகையிலான தமி ழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் – உதவி யாளர் சங்கத்தினர் வெள்ளி யன்று மாநிலம் தழுவிய அளவில் மறியலில் ஈடுபட் டனர்.மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையை சம்ப ளத்துடன் சேர்த்து வழங் கிட வேண்டும்; அரசு ஊழி யர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம், அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங் கேற்று ஆயிரக்கணக்கா னோர் கைதாகினர்.
கரூரில் 500 பேர் கைது
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் கரூர் மாவட்டத் தலை வர் பி.தனபாக்கியம் தலை மை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் ஜி.ஜீவா னந்தம் மறியல் போராட் டத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி, அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணி யன், மாவட்ட தலைவர் வி.மோகன்குமார், மாவட் டப் பொருளாளர் எம்.மகா விஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பொன். ஜெயராம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் என்.சாந்தி, மாவட்டப் பொருளாளர் பி.சரஸ்வதி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி.அங்கமுத்து, மாணவர் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் இரா.முத்துச்செல்வன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சாமுவேல்சுந்தரபாண்டி யன், சடையாண்டி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
திருவாரூரில்250 பேர் கைது
திருவாரூர் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் பி. ரேவதி தலைமையில் நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயலாளர் ம.அம்புஜம் காமராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் நா.பாலசுப்ரமணியம், மாவட்டத் தலைவர் ஜி.பழ னிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.பைரவநாதன் ஆகி யோர் போராட்டத்தை வழிநடத்தினர்.ஒன்றிய நிர்வாகிகள் நீடாமங்கலம் பி.மாலதி, ஆர்.வசந்தி, என்.உமா, வலங் கைமான் ஏ.பிரேமா, பி. சித்ரா, ஆர்.கலாவதி, முத் துப்பேட்டை எஸ்.மல் லிகா, எஸ்.லட்சுமி, இரா. பொன்மணி, நன்னிலம் ஜி.சித்தி, ஜி.கமலாநேரு, வி.தவமணி, கொரடாச்சேரி டி.ஆனந்தவள்ளி, டி.சுமதி, என்.திலகவதி, குடவாசல் டி.ராஜேஸ்வரி, பி.சரஸ் வதி,திருவாரூர் எம்.ராஜ லட்சுமி, என்.சுசீலா, டி. தமிழரசி, எம்.மங்கையர்க் கரசி, கோட்டூர் ஜி. டேனியா, எஸ்.மலர்க்கொடி, திருத் துறைப்பூண்டி ஆர். அமுதா, எம்.ரேணுகாபதி, மன்னார் குடி எம்.ஜெயக்கொடி மற் றும் நட்சத்திரம் உட்பட சுமார் 250 பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.முன்னதாக பழைய ரயில் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்த னர். அங்கு கோரிக்கை களை முழங்கி மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
நாகையில்200 பேர் கைது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் சார்பில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியலுக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.வேம்பு தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலா ளர் சி.லதா கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னார். மாநிலப் பொருளாளர் பி.புவனேஸ்வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். ராமானுஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.என்.ஆர். சிவகுமார், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.ஆர். சுப்பிரமணியன், சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர். கே.கிருஷ் ணவேணி நன்றி கூறினார். சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
புகைவண்டி நிலையம் முன்பு நடைபெற்ற இந்த சாலை மறியலுக்கு, சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜி.இந்திரா தலைமை தாங் கினார். அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் இரா.பன்னீர்செல்வம், வட்டத் தலைவர் த.இரவிச் சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோ கரன், மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்க நிர்வாகி என்.சிவகுரு ஆகி யோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.மறியல் போராட்டத்தில் 91 பெண்கள் பங்கேற்று கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.