சேலம்,ஜூன்.8-சேலத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கபடி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் அகில இந்திய கபடி போட்டி கடந்த 6-ந்தேதி முதல் மின் ஒளியில் நடந்து வருகிறது. சேலம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரம் கோப்பைக்கான இந்த போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 21அணிகளும் கலந்து கொள்கின்றன.ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணியும், புதுக்சேரி சாய் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 42-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் சேலம் ஸ்போர்ட்ஸ் அணியும், உத்திரபிரதேச போலீஸ் அணியும் விளையாடின. இதில் உத்திரபிரதேச போலீஸ் அணி 27-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.அடுத்து பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் சிவகங்கை சக்தி டைல்ஸ் அணியும், ஜம்மு காஷ்மீர் அணியும் மோதின. இந்த போட்டியில் சிவகங்கை அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் டெல்லி பாலம் அணி 44-21 புள்ளி கணக்கில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தியது. இப்போட்டிகள் 10-ந்தேநடைபெறுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: