சென்னை, ஜூன் 7-தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு பள்ளிக்கூடத்தி லேயே நிரந்தர சாதி சான் றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற் காக உடனடியாக விண்ணப் பம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து அரசு உத் தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங் களிலும் 6 ம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிக ளுக்கு அந்தந்த பள்ளிக் கூடத்திலேயே சாதி சான்றி தழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங் கப்படும் என்று சட்டசபை யில் முதலமைச்சர் ஜெயல லிதா அறிவித்தார்.அதனடிப்படையில் மேற் கண்ட சான்றிதழ்கள் வழங் குவது தொடர்பாக வரு வாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப் பினார்.அந்த கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து, 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்ட மூன்று சான்றி தழ்கள் வழங்குவது பற்றி அரசாணை வெளியிடப் படுகிறது.6 ம் வகுப்பு மாணவர்க ளுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப் பிட சான்றிதழ் வழங்குவ தற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை யும், உரிய ஆவணங்களை யும் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங் களுக்குள் வாங்கி, அவற்றை சம்பந்தப்பட்ட தாசில்தா ருக்கு அனுப்ப வேண்டும்.
அதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விண் ணப்பங்களை பரிசீலனை செய்து, வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத் திற்குள் மாணவர்களுக்கான நிரந்தர சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப் பிட சான்றிதழ் தயாரிக்க வேண்டும்.அதன்பிறகு தயாரிக்கப் பட்ட சான்றிதழ்களை அந் தந்த தாசில்தார்கள் சம்பந் தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒப் படைக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், தமி ழகம் முழுவதும் 6 ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாண வர்களுக்கும் நிரந்தர சாதி சான்றிதழ், வருமான சான்றி தழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும்.

Leave A Reply

%d bloggers like this: