திருநெல்வேலி, ஜூன் 7 -மேலப்பாளையம் 32வது வார்டில் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டுமென நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் மீராஷா மனு அளித் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:மேலப்பாளையம் 32 வது வார்டு காயிதே மில்லத் தெருவில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதை சரி செய்வ தற்காக கடந்த ‘நவம்பர் 2011’ இறுதியில் தெருவின் சரி பாதியில் இருந்து மேற்கு நோக்கி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பழமை வாய்ந்த குடிநீர் குழாய் தணிக்கப்பட்டது. அவ்வாறு தணிக்கப்பட்ட போது தெருவின் மேற்கு பகுதிவரை தோண்டாமல் அரைகுறையாக தோண்டி மூடிவிட்டனர். அதன்பிறகு மேற்கு பகுதியில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் நின்றுவிட் டது.இதுபற்றி கடந்த 5 மாதங்களாக சம்மந்தபட் டவர்களிடம் பலமுறை நேரில் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு குடிநீர் கிடைக்க உதவ வேண்டும்.இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.