அம்பத்தூர், ஜூன் 7 –
கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடில் வசிப்ப வர் அருண்குமார் (45). இவரது மனைவி சத்யா. அருண்குமார் சொந்தமாக் எமர்ஜென்சி லைட் வியாபாரம் செய்து வருகிறார். மனைவி சத்யா நேற்று காலை தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அருண்குமார் புதன்கிழமை மதியம் 1 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம் போல் ஜென்னலில் மாட்டி விட்டுச் சென்று விட்டார்.பின்னர் மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு வந் துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 10 லட்ச ரூபாய் பணம், 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது.அருண்குமார் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜென்னலில் மாட்டிவிட்டு சென்றதை நோட்டம் விட்ட சில மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து கொள்ளையடித்து விட்டு, மீண்டும் கதவை பூட்டிவிட்டு சாவியை ஜென்னலில் மாட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.இதுகுறித்து அருண்குமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொரட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின் றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி யில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: