ஓசூர், ஜூன் 7-
ஓசூர் ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்விலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றதோடு 36 மாணவர்கள் பல பாடங்களில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள் ளனர்.இ. பிரவீன்குமார், ஆர். பானுமதி ஆகியோர் 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடத்தை யும், எம். ரம்யா 493 எடுத்து இரண்டாம் இடத்தையும், கே. ரிசியா சங்கர் 492 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும் கணிதத்தில் 10 மாணவர்களும், சமூக அறி வியலில் 10 மாணவர்களும், அறிவியலில் 16 மாணவர் களும் 100க்கு 100 பெற்றுள்ளனர். தமிழில் 99ம் ஆங்கிலத் தில் 98 ம்பெற்று இரு பாடங்களிலும் முதலிடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர் களின் சராசரி 468.3 மார்க்கும் 92.6 விழுக்காடும் பெற்று மாவட்டத்தில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர் பெற்றோர்களும், பொதுமக்களும் தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: