கோவை, ஜூன் 7-கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் பேக்கரி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்புகள் நடை பெறவுள்ளன. கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேக்கரி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.இப்பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் பேராசிரியர் மற்றும் தலைவர், அறு வடை பின்சார் தொழில் நுட்ப மையம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரியில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம்.பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூன் 12 ம் தேதியாகும்.

Leave A Reply

%d bloggers like this: