கடலூர் ஜூன் 7-விவசாய நிலங்களில் வழி யாக குழாய் அமைத்து எரி வாயு கொண்டு செல்லுவ தற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ் ணன் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத் திற்கு பிறகு, பொதுச்செய லாளர் பி. சண்முகம் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, கொப்பரை தேங்காய் தமிழ்நாட்டில் கடும் வீழ்ச்சி அடைந்துள் ளது. 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரைக்கும்தான் விவசாயிக ளுக்கு கிடைக்கிறது. மத்திய அரசு ஒரு கிலோ கொப்ப ரைக்கு ரூ.51 க்கு கொள் முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு போது மானதாக இல்லை. எனவே, இந்த விலையை ரூ.70 உயர்த்த கோரி தென் விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டங் களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.கேரள மாநிலம் கொச்சி முதல் மேங்களுர் வரைக்கும் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு எடுத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள் ளது. இந்த திட்டத்திற்கு விவ சாயிகளின் நிலத்தில்தான் குழாய் இணைப்புக்கு பைகள் புதைக்க உள்ளனர்.
இத னால், தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கோவை, திருப்பூர் உள் ளிட்ட ஏழு மாவட்டங்க ளில் 136 கிராமங்கள் பாதிக் கும்.இந்த திட்டத்திற்கு விவ சாயிகளின் நிலங்கள் 20 அடி அகலம் கையகப்ப டுத்தி குத்தகையாக 10 விழுக் காடு விவசாயிகளுக்கு வழங்க உள்ளனர். மேலும், பெரிய மரங்கள் வெட்டப்படும், பயிர் சாகுபடி செய்யமுடி யாது. கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளமுடியாது. அந்த நிலத்தின் உரிமையா ளர்தான் பைப் லைனை பாதுகாக்கவேண்டும். எதா வது அசம்பாவிதம் நடத்hல் நிலத்தின் உரிமையாளருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட் டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை விவசாயிகள் சங் கம் கடுமையாக எதிர்க்கிறது என்றும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த திட்டத்திற்கான பணியை ரயில்வே, தேசிய நெடுஞ் சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் சங்கத்தின் கோரிக்கை என் றார்.ஜூன் 12 தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மேட்டுரில் 79 அடிதான் தண்ணீர் உள் ளது. மத்திய அரசு தலை யிட்டு தண்ணீர் பெற்று தருவதற்கான உத்தரவாதம் கிடைத்த பிறகு மாநில அரசு அணையில் இருந்து தண்ணீரை திறந்தால்தான் குறுவை சாகுபடிக்கு ஏற் றதா இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.ஏரி,குளம், கண்மாய் களில் மணல் அள்ளும் உரி மையை மாநில அரசு தனி நபர் ஒருவருக்கு ஒப்பந்தம் விட்டுள்ளதாக கூறப்படு கிறது. உரத்திற்கு மாற்றாக வண்டல் மண்ணை விவ சாயிகள் கால காலமாக எடுத்துச் செல்கிறார்கள். இப்போது, ஒரு வண்டிக்கு ரூ.500 வசூல் செய்கிறார்கள். இi அனுமதிக்க முடியாது என்றும் பி. சண்முகம் கூறி னார்.இந்த பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் கே. முகமது அலி, மாவட்ட செயலாளர் ஜி.ஆர். ரவிச்சந் திரன், தலைவர் எஸ். காம ராஜ் ஆகியோர் உடனிருந் தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.