திண்டுக்கல். ஜூன் 7-செம்பட்டி அருகே யுள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (27). இவர் பாலிமர் மில்லில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (23)யும் இதே மில்லில் வேலை செய் கிறார். தலித் வகுப்பைச் சேர்ந்த ராஜாவை சின்னாள பட்டி காவல்நிலையத்திற் குட்பட்ட கலிக்கம்பட்டி யில் 9 பவுன் நகை திருட்டு தொடர்பாக கிடைத்த செல் மெசேஜை வைத்து விசா ரணை செய்வதற்காக சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையில் சிங் கராயர், நடராஜபெரு மாள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் புத னன்று பாலிமர் மில்லிற்குச் சென்று விசாரித்துள்ளனர். முன்னதாக அவரது அண்ணன் அன்புச்செல்வ னை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு இருவரையும் கூட்டிக் கொண்டு ராஜா வீட்டுச் சென்று வீட்டை சோத னையிட்டு உள்ளனர். பின் னர் செம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசா ரித்தனர். அதன்பிறகு திண் டுக்கல் வடக்குக் காவல் நிலையத்தில் கிரைம் பிரி வில் வைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது ராஜா கடுமையான தாக்குத லுக்குள்ளாகி நள்ளிரவில் இறந்துள்ளார் என தெரி கிறது. இதனையடுத்து ராஜா வின் உடலை பாதுகாப்பு கருதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க் காமல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் சேர்த்துள்ளனர்.
மாஜிஸ்திரேட் விசாரணை
இதனையடுத்து வேட சந்தூர் மாஜிஸ்திரேட் அரு ணாச்சலம், ராஜாவின் உறவி னர்களிடமும், போலீசாரி டமும் விசாரணை நடத்தி னார். அதன்பிறகு ராஜாவின் பிரேதத்தை பார்வையிட் டார். இந்நிலையில் தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம். ஆர்.முத்துச்சாமி மற்றும் தலைவர்கள் கே.அருள் செல்வன், வழக்கறிஞர் சின் னக்கருப்பன் ஆகியோரி டம் ராஜாவின் மனைவி மகேஸ்வரியின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் அளித் தனர்.
சாலை மறியல்
இதனையடுத்து ராஜா வின் தந்தை உட்பட அனை வரும் ராஜாவின் இறப்புக்கு நீதி வேண்டும் என்று வலி யுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் தலைமையில் சாலை மறி யல் போராட்டம் நடத்தி னர். ராஜாவை விசார ணைக்கு அழைத்துச் சென்ற 6 போலீசாரையும் உடனடி யாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இறந்து போன ராஜாவின் மனைவி மகேஸ் வரிக்கு ரூ.10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். இந்த காவல்நிலைய மர ணம் குறித்து மாவட்ட நீதி பதி தலைமையில் நீதி விசா ரணை நடத்த வேண்டும். 3 டாக்டர்கள் மேற்பார்வை யில் 2 வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை நடத் தப்பட வேண்டும் என்று கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட் டம் நடத்தியது. இம்மறியல் போராட்டத்தில் நிலக் கோட்டை சட்டமன்ற உறுப் பினர் ராமசாமி மற்றும் புதிய தமிழகத்தைச் சேர்ந்த வர்களும் கலந்து கொண் டனர்.
சிபிஎம் பங்கேற்பு
இந்த மறியல் போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேடசந் தூர் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.தெண்டாயுதம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் முருகேசன், துரைக்கண் ணன், அசன்முகமது, மற் றும் பாலுபாரதி, திண்டுக் கல் ஒன்றியக்குழு உறுப்பி னர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை ஏற்பு
மறியல் பல மணி நேரம் நீடித்தது. ஆனால் மாவட் டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளர், கோட்டாட்சி யர் என யாரும் மருத்துவ மனைக்கு வராததால் அனை வரும் உடலை வாங்காமல் ஊருக்குச் செல்ல வேனில் ஏறிவிட்டனர். அப்போது மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் மற்றும் பழனி, திண்டுக்கல் கோட்டாட்சி யர்கள், வேடசந்தூர் தாசில் தார் ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்தனர். அதன் பிறகு தீண்டா மை ஒழிப்பு முன்னணி மற் றும் சட்டமன்ற உறுப்பி னர் ராமசாமி ஆகியோரு டன் பேச்சுவார்த்தை நடத் தினர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த மர ணத்தில் தொடர்புடைய காவலர்களை இரவு 12 மணிக்குள் பணியிடை நீக் கம் செய்வது, 3 டாக்டர் களைக் கொண்டு போஸ்ட் மார்ட்டம் செய்வது, ராஜா வின் மனைவிக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத் தரு வது, மாவட்ட நீதிபதி தலை மையில் நீதி விசாரணை நடத்துவது போன்ற கோரிக் கைகள் ஏற்கப்பட் டது. இத னையடுத்து போராட்டம் கைவிடப்பட் டது. (நநி)

Leave A Reply

%d bloggers like this: