மும்பை, ஜூன் 7-எண்ணெய் – எரிவாயுத் தொழிலில் இன்னும் 4-5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்யப் போவதாகவும் இதன் மூலம் லாபத்தை இரு மடங்கு ஆக்குவோம் எனவும் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி வியாழ னன்று நிறுவன பங்குதாரர் கள் கூட்டத்தில் அறிவித்தார்.வருகிற 2-3 ஆண்டுகளில் பெட்ரோலிய ரசாயனம் மற் றும் சுத்திகரிப்பு தொழில் களில் புதியத் திட்டங்கள் துவக்கப்படும். சுத்திகரிப்பு வணிகம் முதலீடு, பின்னோக்கிய நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய 30- 40 சதவீதம் சேர்க்கப் பட்டு, வரம்பு எல்லை சரி செய்யப்படும். இன்னும் 3 ஆண்டுகளில் சில்லறை விற்பனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் திற்கு, மிகுந்த லாபம் தரும் தொழிலாக இருக்கும் என் றும் அம்பானி கூறினார்.4ஜி வர்த்தக செயல்பாடு திட்டம் முடிவு செய்யப்படு கிறது. அதேபோன்று களி மண் கீழே உள்ள எரிவாயு உற்பத்தியில் நிறுவனம் அதிக முதலீடு செய்துள் ளது. இதன்மூலம் இன்னும் 5 ஆண்டுகளில் எரிவாயு உற் பத்தி 10 மடங்கு அதி கரிக்கும். தற்போது 3 ஆயி ரம் கோடி கன அடி எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் இன்டஸ் ட்ரீஸ் லிமிடெட் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்த பின்னர் இந்தியாவில் மட்டுமல்லாமல், உல கிலேயே வலிமைமிக்க நிறு வனமாக அது இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி பங்குதாரர்களுக்கு, புதிய திட்டங்களை விளக்கினார்.முக்கிய இயற்கை எரி வாயு பகுதியான கிருஷ்ணா கோதாவரியில் (கேஜிடி 6) எரிவாயு உற்பத்தி மிகுந்த சிரமமாக உள்ளது. செயற் கைக் கோள் களம் மூலமாக இப்பகுதியில் நாள் ஒன் றுக்கு 6 கோடி நிலையான கனமீட்டர் எரிவாயு உற் பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. தற்போது நாங்கள் தேசிய அளவிலான டிஜிட்டல் சேவைத்திட் டத்தை அளிக்க, திட்டங் களை முடிவு செய்து வரு கிறோம். இந்தியாவின் தற்போதைய பொருளாதார சரிவு, தற்காலிகமானது ஆகும். இது வலிமைமிக்க தாக மீண்டும் எழும் என் றும் அம்பானி தனது உரை யில் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: