கிருஷ்ணகிரி, ஜூன்7-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பஞ்சாயத்தில் உள்ள வள்ளிமலை கிராமத் தில் 200 நரிக்குறவர் சமூகத் தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் பாசி, ஊசி விற்பனையிலும், சிலர் விவ சாய கூலித் தொழிலாளர் களாகவும் உள்ளனர். இந்த சமூகத்தில் இருந்து முதல் முறையாக எம்.ராஜ பாண்டி என்ற மாணவர் மருத் துவக் கல்லூரியில் சேர உள் ளார். இவர் ஊத்தங்கரை அதிய மான் மெட்ரிக் குலேசன் மேல் நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1167 மதிப் பெண் வாங்கி தேர்ச்சி பெற்றார். கணிதம் மற்றும் உயிரிய லில் 100-க்கு 100 மதிப்பெண் ணும், தமிழில் 190, ஆங்கிலத் தில் 186, இயற்பியலில் 196, வேதியியலில் 195 மதிப்பெண் களும் வாங்கியுள்ளார். மருத்து வப் படிப்புக்கான இவரின் கட்-ஆப் மார்க் 197.5 ஆகும். இவர் மருத்துவப் படிப் புக்கு அரசு மருத்துவக் கல் லூரியில் விண்ணப்பித்துள் ளார். தமிழகத்தில் நரிக்குறவர் சமூக மக்கள் மிகவும் பின் தங்கியோர் பட்டியலில் (ஓ.பி.சி.) உள்ளனர். ராஜபாண் டியன் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் கட் ஆப் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரியில் “சீட்” கிடைத்துவிடும் எனத் தெரிகிறது.
ராஜபாண்டியுடன் உடன் பிறந்தவர்கள் 3 பேர். இவர்தான் மூத்தவர். படிப்பின் மீது ராஜ பாண்டிக்கு இருந்த ஆர் வத்தை கண்டு அவரது உற வினரான எஸ்.லட்சுமணன் இவருக்கு உதவி செய்துள்ளார்.ராஜபாண்டியன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 463 மார்க் பெற்றிருந்தார். இவரின் இரண்டு தம்பிகளும் கோனம்பட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படிக்கின் றனர். இதுபற்றி ராஜபாண்டி கூறியதாவது:- பிளஸ்-2வில் இவ்வளவு மார்க் வாங்கியதை நினைத்து நான் அடைந்த மகிழ்ச்சியை விட எனது உறவினர்கள் தான் அதிக சந்தோஷமடைந்தனர்.எனது சமூகத்தின் முன் னேற்றத்திற்காக பாடுபடு வேன். எனது மருத்துவப் படிப் பை முடிக்க சேவை மனம் படைத்தோரின் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ராஜபாண்டியின் உறவினர் லட்சுமணன் கூறுகையில், நரிக்குறவர் சமூகம், பொரு ளாதாரத்திலும், கல்வியிலும், சமூக ரீதியிலும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் நரிக்குற வர் சமூகம், தாழ்த்தப்பட்டோர் இனப் பட்டியலில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் மிகவும் பின்தங்கியுள்ள பட்டி யலில் சேர்க்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் இன பட்டி யலில் சேர்த்தால் கல்வி மற் றும் வேலை வாய்ப்பு பெற எங் கள் சமூகத்தினருக்கு சிரமம் இருக்காது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: