புதுதில்லி, ஜூன் 7-குடியரசுத் தலைவர் தேர் தலுக்கான வேட்பாளர் குறித்து பிரதமர் மன்மோ கன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியு டன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவல கத்தில் ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உட னிருந்தார். 5 முதல் 7 நிமி டம் வரை இச்சந்திப்பு நீடித் ததாக கூறப்படுகிறது.இச்சந்திப்புக்குப் பின் னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோ ணியிடம் கருணாநிதி தெரி வித்திருந்த கருத்தையே பிர தமர் மன்மோகன்சிங்கிடம் தாமும் தெரிவித்ததாகக் கூறினார். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாள ரையே திமுக ஆதரிக்கும் என்றார் அவர்.பின்னர் காங்கிரஸ் கட் சித் தலைவர் சோனியா காந் தியையும் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந் திப்பு 15 நிமிட நேரம் நடை பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: