உழைக்கும் மக்களுக்கு எதிரானது
பதவிக்காக காங்கிரசை எந்த அளவிற்கு கீழிறங்கியும் ஆதரிக்கத்தயார் என்று திமுக முடிவுகட்டி விட்டது. அதனால்தான் பெட்ரோல் விலையை கண்டிக்க வேண்டிய நேரத்தில், பேருந்து, மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடுமாறு கட்டளையிட்ட கலைஞர், இப்போது மத்திய அரசு 2 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் விலையை குறைத்ததும், மத்திய அரசாவது, 2 ரூபாய் விலைக்குறைப்பு செய்துள்ளது; ஆனால், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலையை ஜெயலலிதா குறைத்தாரா? என்று கேட்கிறார். அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் நடத்துவதாக நினைத்து இப்படி பேசுகிறார். உண்மையில் அவரின் பேச்சு, தமிழக உழைப்பாளி மக்களுக்கு எதிரான பேச்சு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல் விலை உயர்வுக்கு கலைஞர் இனியும் வக்காலத்து வாங்க வேண்டாம். – சுரேசு, அம்பத்தூர்

பெருமைப்பட எதுவும் இல்லை
“ஐ.மு.கூ.- 2 அரசு மூன்றாம் ஆண்டு- கொண்டாட என்ன இருக் கிறது” பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் தலையங்கம் படித்தேன். கொண்டாட எதுவுமே இல்லை என்பதுதான் எனது கருத்து.பிரதமர் முதற்கொண்டு, காங்கிரஸ் காரர்கள் பேசும்போது, “உலக அள வில் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதும், இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை; அதற்குக் காரணம் மன் மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கைதான்” என்கிறார்கள். அதற்கு இவர்களா காரணம்? இடது சாரிகள் அல்லவா, காரணம்! பொதுத் துறைகளை தனியாரிடம் தள்ளிவிட மன்மோகன்சிங் துடித்தபோது, அதை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தியதுதான் காரணம். அதற்குக் கூட “இடது சாரிகள் எனது கையைப் கட்டிப் போட்டு விட்டார்கள்” என்று மன் மோகன்சிங் கூப்பாடு போட்டாரே…அதுமட்டுமல்லாமல், ஐ.மு.கூ.-1 அரசாங்கம், “தகவல் அறியும் உரி மைச் சட்டம், நூறுநாள் வேலைத் திட்டம், வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை நாங்கள்தான் கொண்டு வந்தோம்” என்றும் காங் கிரசார் வாய்கூசாமல் சொல்கிறார்கள். அதற்கும் இவர்களா, காரணம்..? இடது சாரிகள்தானே காரணம்!ஆகவே, பிரதமரோ, காங்கிரஸ் காரர்களோ பெருமைப்பட எதுவுமே யில்லை.- எஸ்.கே.சாமி, போரூர்

நோக்கம் என்ன?
“செயற்கைப் பற்றாக்குறை நோக் கம்தான் என்ன?”- தலையங்கம் சுட் டிக்காட்டிய விஷயங்கள் யதார்த் தமானதாகவும், மக்களின் மனநிலையை படம்பிடித்தது போலவும் உள்ளது.“அதிக விலை கொடுத்தாலும் பர வாயில்லை, தட்டுப்பாடு இல்லாம லாவது பெட்ரோலும், டீசலும் கிடைக் காதா என்ற மனநிலைக்கு உள்ளாக்கு வதே” என்ற வரிகள், சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் வெளிப்பட்டது.ஆனாலும், “பெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்” கட்டுரையில் சுட்டிக்காட்டியது போல, மாறி மாறி ஆட்சிக்கு வந்து, தாங்கள் செய்த தவ றான விஷயங்களை மறைத்து, மறந்து, அடுத்தவரை குற்றம்சாட்டிக் கொண்டே ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களைக் கண்டித்து ஒதுக்கிடும் போராட்டத் திற்கு மக்களின் மனநிலை இன்னும் தயாராகவில்லையே…- சுத்தியன், வேலாயுதம்பாளையம்

ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட பலரும் தயங்கிய நிலை யில், போட்டியின் அவசியத்தை உணர்த்தியது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான். இப்போது தேமுதிக போட்டியிடும் நிலையில் அக்கட் சியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருவதை தீக்கதிர் செய்திகளில் பார்த்தேன்.ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று பலரும் சொல் வார்கள். ஆனால் செயலில் அதை காட்ட முடியாது. ஆனால், ஜெய லலிதா முதல்வராக பொறுப்பேற்ற நாளன்றே, ஆக்கப்பூர்வ எதிர்க்கட் சியாக செயல்படுவோம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறி வித்தார். அதன்படியே தற்போது, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம்- மின் கட்டண உயர்வு, மக்கள் நலப் பணியாளர் பணிநீக்கம் என அதிமுக அரசு மக்களை வஞ்சித்துள்ள நிலை யில், அக்கட்சிக்கு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் துணிச்சலான எதிர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டி வருகிறது.நாங்கள்தான் உண்மையான எதிர்க் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுக போன்ற கட்சிகள் ஓடி ஒளிந்து கொண்டதையும் இங்கே நினைவு படுத்த வேண்டியுள்ளது.- எஸ்.ரத்தினம், விராலிமலை

கைக்கூலிகளுக்கு சாட்டையடி
“தியாகக் கணக்கைச் சொல் வோம்” – என்ற கட்டுரை, காங்கிரஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகளுக்கு சரியான சாட்டையடி.வரலாற்றின் நெடுகிலும், கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக காங் கிரஸ் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட சதிகளையும், அந்த சதிகள் உடைத் தெறியப்பட்டதையும் இளைய தலை முறை அறியும் வகையில் சு.பொ.அகத் தியலிங்கம் எடுத்துரைத்துள்ளார்.“இந்தியாவில் விடுதலைக்குப் பிற கும் கம்யூனிஸ்டுகளை விட உயிர்த் தியாகம் செய்த கட்சி வேறு ஏதேனும் உண்டா… தியாகிகள் பட்டியலை வெளியிட்டு பகிரங்க விவாதம் நடத் தப் பிற கட்சிகள் தயாரா?” என்ற கட்டு ரையாளரின் கேள்விக்கு பதிலளிக்க யாருக்கு திராணி இருக்கிறது?- இரா.சீனிவாசன், ஆலந்தூர்

Leave A Reply

%d bloggers like this: