ஊத்தங்கரை, ஜூன் 7-
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் போலி யாக வீட்டு மனைப்பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த பட்டாக்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (ஜூன் 4) செவ்வாயன்று வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஒரு நாள் அடையாள உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்திற்கு ஆர். சபாபதி தலைமை தாங்கினார். இப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சித்தோழர்கள் கலந்து கொண்டனர்.
மின் கசிவால் தீ விபத்து வீடுகள் சாம்பல்
கள்ளக்குறிச்சி, ஜூன் 7-க
ள்ளக்குறிச்சி வட்டம் எடுத்தவாய் நத்தம் கிராமத் தில் இரவு மின் கசிவு ஏற்பட்டதால் 40க்கும்மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது.தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம் பத், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் உமாபதி, வட்டாட்சியர் மூர்த்தி, மின்வாரியம், சுகாதாரம் ஆகிய துறை அதிகாரிகள்பாதிக்கப்பட்டனர். வீடுகளை பார்வையிட்டனர். பின்னர் ஆட்சியர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.இத்தகவலை அறிந்த சங்கராபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அரசு தலைமை கொறடாவுமான ப. மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப் பினர் அழகுவேல் பாபு ஆகியோர், தீவிபத்தில் சேத மடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு அரசு நிவாரணமாக 10 கிலோ அரிசி, 2 லிட்டர் மண்ணெண்ணை, வேட்டி, சேலை மற்றும் ரூ. 15 ஆயி ரம் வழங்கினார். மேலும் தலைமை கொறடா ப.மோகன் சொந்த செலவில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கு 25 கிலா அரிசி, தலா. ரூ. 1000, தீ விபத்தில் உயிரிழந்த தங்கவேலுவின் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.எரிவாயு
உருளை சிலிண்டர் பயன்படுத்த விதிமுறைகள்
திருவண்ணாமலை, ஜூன் 7-
திருவண்ணாமலை மாவட்டத்தில் எரி வாயு உருளை முகவர்கள் கூட் டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் பின்வரும் விதிமுறைகளை கடைபிக்க மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தினார். எரிவாயு உருளைகளை பாதுகாப் பாககையாள வேண்டி யதை கருத்தில் கொண்டு இனி மேல் எந்த எரிவாயு முகவ ரும் அவர்களது கிடங் கில் வைத்து விநியோகம் செய்யக் கூடாது. வாடிக் கையாளர் களுக்கு அவர்களது பகுதி களுக்கேள வீடு களுக்கே உரிய வாகனம் மூலம் கொண்டு சென்று விநி யோகம் செய்ய வேண்டும்.எரிவாயு உருளை பதிவு செய்திட காலவரம்பு ஏது மில்லை என்பதால் எரிவாயு உருளையைப் பெற்ற மறு நாளே வாடிக்கையாளர்கள் அடுத்த எரிவாயு உருளை கோரி பதிவு செய்து கொள்ளலாம். எரிவாயு முகவர்கள் பதிவு செய்ய மறுக்கக்கூடாது. வீட்டு உபயோகத்திற் கான எரிவாயு உருளையை வேறு பயன்பாட்டுக்கு கண் டிப்பாக பயன்படுத்தக்கூடாது. வணிக பயன் பாட்டுக் கான எரிவாயு உருளையை வைத்து பயன் படுத்துபவர் களாக இருந்தாலும், அதற்குரிய அண்மையில் பெற்ற ரசீதினை வைத்திருக்க வேண்டும். ரசீது இல்லாத வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளும் கைப்பற் றுகை செய்யப்படும்.சேவை குறைபாடு குறித்து பின்வரும் எண்களில் பொதுமக்கள் 9444441283, 9025216190, 9442258877 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். இத்தக வலை ஆட்சியர் விஜய் பிங்ளே தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: