சென்னை, ஜூன் 7 -தமிழகத்தில் உள்ள பொறியியல் படிப்பு களில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக் கான கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை நடை பெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அறி வித்துள்ளார்.அண்ணா பல்கலை.யில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப் பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். இந்த நிலையில், முன்னதாக ஜூலை 9ம் தேதி கலந்தாய்வு துவங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது.ஆனால், அதே சமயத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வும் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டதால் கலந்தாய்வு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு துணை வேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விண்ணப்பங்களுக்கு ராண் டம் எண் 25ம் தேதி அளிக்கப்படும். மாண வர்கள் ரேங்க் பட்டியல் ஜூன் 30ம் தேதி வெளியாகும்.ஜூலை 5ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தொழிற்பிரிவு மாண வர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். 12ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்க ளுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 13ம் தேதி முதல் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.சென்னையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அண்ணா பல் கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: