இந்திய கலப்பு இரட்டையர் அணியான மகேஷ்பூபதி-சானியா மிர்சா இணை பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. பயஸ்-வெஸ்னினா இணை அரை இறுதியில் தோற்றது.ஒற்றையர் ஆட்டங்களின் ஆடவர் பிரிவில் ஒரு அரை இறுதி ஆட்டத்தில் நாடலும் பெர்ரரும் மோதுகிறார்கள். மகளிரில் ஒரு அரை இறுதியில் சரபோவாவும் கேவிட்டோவாவும் மோதுகிறார்கள்.பூபதி சானியா இணை முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது. 2009 ஆஸி. ஓபனில் பட்டம் வென்ற இவர்கள், 2010 ஆஸி. ஓபனில் இரண்டாம் இடத்தில் வந்தனர். இவர்கள் 6-3, 6-2 என்ற செட்டுகளில் கஜகஸ்தான் – இத்தாலி இணையான கலினா வோஸ்காபோயவா-டேனியலி பிராக்கியாலி அணியை தோற்கடித்தனர்.ஆடவர் ஒற்றையரில் ஆன்டிமர்ரே தோற்றார். அவரை ஸ்பெயினின் டேவிட் பெர்ரர் 6-4, 7-6, 6-3 6-2 என்ற செட்டுகளில் வென்றார். மர்ரே மோசமாக ஆடவில்லை என்ற போதும் பெர்ரரின் தற்காப்பு, மர்ரேயின் ஈட்டி முனையை மழுங்கடித்துவிட்டது. மற்றொரு கால் இறுதியில் சாதனைபடைக்கக் காத்திருக்கும் ராபெல் நாடல் 7-6 (6-4) 6-2, 6-3 என்ற செட் புள்ளிகளில் சக நாட்டவரான நிகோலஸ்அல்மக்ரோவைத் தோற்கடித்தார். பிரெஞ்ச் ஓபனில் நாடல் இத்துடன் 50 வெற்றிகளைப்பெற்றுள்ளார்.மகளிரில் ரஷ்யாவின் மரியா சரபோவா அரை இறுதியில் ஆடவுள்ளார். அவர் விம்பிள்டன் சாம்பியன் கேவிட்டோவாவை எதிர்த்து ஆடுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: