விருதுநகர், ஜூன் 7 -தமிழகம் முழுவதும் தீண்டாமை, வன்கொடுமை ஒழிப்பு, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பி.சம்பத் தலைமையில் அருப்புக் கோட்டையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், முன்னணியின் தலைவர் பி.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன், கு.ஜக்கையன், நீலவேந்தன், ஜி.லதா, சுவாமிநாதன், கணேஷ் உட்படமாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பிரச்சாரஇயக்கம்
தமிழகத்தில் வன்கொடுமைகள் அதிகரித்துவருகிறது. பாதிக்கப்படுகிறதலித் மற்றும் பழங்குடிமக்கள்கொடுக்கும் புகார்களைக் கூட பதிவு செய்ய மறுக்கிறது. தீண்டாமைகொடுமைகளையும், கொலை உள்ளிட்ட வன்கொடுமைத் தாக்குதல்களையும் மூடி மறைத்து தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று பறைசாற்றுவதிலேயே அரசும், காவல்துறையும் குறியாக உள்ளது. ஆகவே தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 4 முதல் 9 வரைதமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது.
பி.எஸ்.ஆர்.நினைவுதினம்
தஞ்சைதரணியில் நிலப் பிரபுத்துவத்தின் வர்க்க, சமூக ஒடுக்குமுறைகளுக்கு, எதிராக போராட்டக்களம் கண்ட தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று தமிழகம் முழுவதும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்கிட மாநிலக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தீர்மானங்கள்
விடுதலைப் போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவுதினம் ஆகஸ்ட் 20ல் வருகிறது. அதற்கு முன்னதாக நெல்லையில் கட்டப்பட்டுவரும் ஒண்டிவீரன் மணிமண்டபத்தின் பணிகளைமுடித்து திறக்கவேண்டும்; தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கவுரவக்கொலைகள், மற்றும் மிகச் சமீபத்தில் நாமக்கல் களியனூர், காஞ்சிபுரம் மாவட்டம் தொடூர் , சிவகங்கை மாவட்டம் மிளகனுhர், சேலம் மாவட்டம் சங்ககிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி, இராமநாதபுரம் மாவட்டம் புத்தனேந்தல் உள்ளிட்டு தமிழகத்தில் தொடர்கிற வன்கொடுமைகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக அரசு தலையிட்டு 1989 வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் படியிலான நடவடிக்கைகளை உறுதிப்படுத்திட வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: