தஞ்சாவூர், ஜூன் 7-தொலைத்தொடர்புத்துறை நிர்வாகத்தைக் கண்டித்து தஞ்சை பாலாஜி நகரில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து படி உள்ளிட்ட அனைத்து படிகளையும் மாற்றியமைக்க வேண்டும். மருத்துவப்படி 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் எஸ்.சிவசங்கரன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர்சங்க மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.நடராஜா, அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கே.உதயன், என்.எப்.டி.இ மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.