நாமக்கல், ஜூன் 6-
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண் டும் என நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங் கத்தின் மாநிலக் குழு கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம், மாநி லத் தலைவர் கே.முகமது அலி தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலா ளர் எ.எம்.முனுசாமி, பொரு ளாளர் சிவாஜி மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்ட மாநி லக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கால்நடை தீவனங்கள் விலை உயர்ந்துள்ள நிலை யில், அரசு தற்போதைய கொள்முதல் விலையிலி ருந்து பசும்பாலுக்கு ரூ.5ம், எருமைப்பாலுக்கு ரூ.7ம் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் தினமும் சுமார் 1 கோடி லிட்டர் பால் உற் பத்தியாகிறது. இதில் சுமார் 75 லட்சம் லிட் டர் பால் தனியார் நிறுவ னங்களால் கொள்முதல் செய்யப்படு கின்றன. இந் நிலையில் திருச்சி, திண்டுக் கல், வேலூர், சேலம் உள் பட பல மாவட்டங் களில் தனியார் நிறுவனங் கள் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 குறைத் துள்ளன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் வஞ்சிக் கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பால் உற்பத்தியாளர்களுக் கும், ஆரம்ப கூட்டுறவு சங் கங்களுக்கும் அரசு மானி யம் கொடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள் ளது போல தமிழ்நாட்டி லும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் ஊக் கத் தொகை வழங்க வேண் டும். கால்நடை தீவனங்கள் மானிய விலையில் வழங் கிட வேண்டும்.
சென்னை மாத வரம், மதுரை கப்ப லூர், ஆம்பூர் ஆகிய இடங் களில் மூடிக்கிடக்கும் ஆவின் தீவன ஆலைகளைத் திறந்து, உற்பத்தியை அதிகப் படுத்தி 50 சதவிகித மானிய விலையில் பால் உற்பத்தி யாளர்களுக்கு வழங்க வேண்டும். வேலூர், கிருஷ் ணகிரி போன்ற மாவட்டங் களில் ஆரம்ப கூட்டுறவு சங்கங்களில் பால் கொள் முதல் குறைந்துள்ளது. தனி யார் லிட்டருக்கு ரூ.2 கூடு தல் விலை கொடுத்து கொள் முதல் செய்கிறார்கள். இத னால் ஆரம்ப சங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசு தலையிட்டு ஆரம்ப சங்கங்களின் கொள் முதலை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.