அம்பத்தூர், ஜூன் 7 –
திருமுல்லைவாயல் கணேஷ் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசிப்பவர் பிரபாகரன் (42). இவரது மனைவி சரஸ்வதி (32). பிரபாகரன் சின்மைய்யா செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இவர் சேக்காடு குளக்கரை தெருவில் உள்ள ஆவடி நகராட்சிக்கு சொந்தமான பம்ப் ஹவுசில் காவாலா ளியாக அந்நிறுவனத்தின் சார்பில் பணி அமர்த்தப் பட்டார். புதன்கிழமை இவருக்கு இரவு பணி. இவரை பணி மாற்ற வியாழக்கிழமை காலை அதே நிறுவனத் தில் பணிபுரியும் துரைபாபு என்பவர் வந்துள்ளார்.அப்போது இரவுப் பணியில் இருந்த பிரபாகரன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிர பாகரன் பாம்பு கடித்து இறந்துள்ளது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து ஆவடி காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: