தமிழக முதல்வர் ஜெயலலிதா உலகச்சதுரங்க சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்ட ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், 2 கோடிக்கான காசோலையை அவரிடம் வழங்கினார். தமிழ்நாட்டில் ‘பள்ளிகளில் சதுரங்கம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்ற ஆனந்த், அத்திட்டத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.ஆனந்த் தன் மனைவி அருணாவுடன் முதல்வர் ஜெயலலிதாவை அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அதற்குப்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய உதவி அரசுக்கு தேவைப்படுமானால், அதை மகிழ்ச்சியுடன் வழங்கத்தயாராக இருப்பதாக ஆனந்த் நிருபர்களிடம் கூறினார்.அரசின் இந்த முயற்சியில் பெரும் நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசின் இவ்வகையான நிறுவன ஆதரவும், பள்ளிகளில் சதுரங்கம் கற்றுத்தரப்படுவதும் எதிர்காலத்தில் மாநிலத்தில் சதுரங்கத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெரும் நிறுவனங்களின் ஈடுபாடு சதுரங்கத்தை உயரத்திற்குக் கொண்டு செல்லும். தமிழ்நாட்டில் இந்த விளையாட்டின் பொற்காலம் உருவாகப்போகிறது என்றும் அவர் சொன்னார்.

Leave A Reply

%d bloggers like this: