சென்னை, ஜூன் 7-மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண் டும் அல்லது அவரை அமைச் சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:2009 ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் சிவகங்கை தொகுதி யிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசில் உள் துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரம் ஜனநா யக ரீதியாக வெற்றி பெற வில்லை என்றும், உண்மை யிலேயே அவர் தோல்வி அடைந்த வேட்பாளர் தான் என்றும் அப்பொழுதே நான் தெரிவித்து இருந்தேன். மேலும், இதே குற்றச் சாட்டை சென்ற ஆண்டும் (2011) தெரிவித்து, சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி இருந் தேன். இந்திய ஜனநாயகத் தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் அமைந் துள்ள ப. சிதம்பரத்தின் தேர்தலை எதிர்த்து, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட் பாளராக சிவகங்கை தொகுதி யில் போட்டியிட்ட ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் மறுக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்தல் வழக் கினை எதிர்கொள்ள அஞ்சி, அதனை காலம் தாழ்த்தும் வகையில் ப. சிதம்பரம், இந்தத் தேர்தல் வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் இடைக்கால மனுவினை தள்ளுபடி செய்து, இந்தத் தேர்தல் வழக்கினை ப. சிதம்பரம் எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ப. சிதம்பரம் மோசடி யாக வெற்றி பெற்றுவிட் டார் என்பது தான் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்தக் கிரிமி னல் குற்றச்சாட்டினை சிதம் பரம் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள வேண்டும் என்ற இன்றைய நிலையில், இவர் மத்திய உள் துறை அமைச்ச ராக இனியும் பொறுப்பு வகிப்பது இந்திய ஜனநாய கத்திற்கே ஒரு களங்கமாக அமைந்துவிடும்.எனவே, தேர்தல் முறை கேடு என்ற ஊழல் குற்றச் சாட்டிற்கு ஆளாகியுள்ள மத்திய உள் துறை அமைச் சர் ப. சிதம்பரம் இனியும் காலம் தாழ்த்தாது தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண் டும் என்று கேட்டுக் கொள் கிறேன். சிதம்பரம் அவ்வாறு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை யென்றால், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில், பிரதமர் சிதம்பரத்தை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண் டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.