திருநெல்வேலி, ஜூன் 7 -நெல்லை-தென்காசி இடையே ஜூன் 15ம் தேதி ரயில் சேவை தொடங்கப் படவுள்ளதாக ராமசுப்பு எம்.பி. தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-நெல்லை-தென்காசி இடையே நடந்த அகல பாதை பணிகள் முடிவ டைந்து சோதனை ஓட்ட மும் முடிந்துவிட்டது. இந்த வழித்தடத்தில் எப்போது ரயில் சேவை தொடங்கும் என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.எனவே ரயில் சேவை யை தொடங்க நாடாளு மன்றத்தில் வலியுறுத்தி னேன். மேலும் ரயில்வே அமைச்சருக்கும், கப்பல் துறை அமைச்சர் வாசனுக் கும் ரயில்வே போர்டு சேர் மனுக்கும் கடிதம் அனுப்பி னேன். வரும் 15ம் தேதிக்குள் நெல்லை-தென்காசி இடையே ரயில் இயக்கப் படும் என ரயில்வே போர்டு உறுப்பினர் மிஸ்ரா தொலை பேசியில் என் னிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ராமசுப்பு எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: